ஏ.டி.எம் வாசலில் குழந்தை பெற்ற நிறைமாத கர்ப்பிணி

  • IndiaGlitz, [Saturday,December 03 2016]

பாரத பிரதமர் நரேந்திரமோடியின் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பு காரணமாக ஒருபக்கம் மக்கள் ரூபாய் நோட்டு பற்றாக்குறை காரணமாக திண்டாடி வருகின்றனர். இன்னொரு பக்கம் ஏடிஎம் மற்றும் வங்கி வாசலில் காத்திருக்கும் மக்கள் பெரும் மனவேதனைக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி ஒருவர் ஏ.டி.எம்-இல் பணம் எடுக்க வரிசையில் நின்றபோது திடீரென பிரசவ வலி வந்து ஏ.டி.எம் வாசலிலே குழந்தை பெற்றுள்ளார்.
உ.பி.மாநிலம் கான்பூரை சேர்ந்த சர்வெஷா என்ற பெண்ணின் கணவர் கடந்த ஆண்டு சாலை விபத்து ஒன்றில் மரணம் அடைந்தார். இதற்காக கொடுக்கப்பட்ட நிவாரண பணத்தை எடுப்பதற்காக அவர் இன்று தனது மாமியாருடன் ஏ.டி.எம் வாசலில் காத்திருந்தார். அப்போது அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக ஆம்புலன்ஸுக்கு அங்கிருந்தவர்கள் தகவல் கொடுத்தனர். ஆனால் ஆம்புலன்ஸ் வருவதற்கு முன்பே ஏ.டி.எம் வாசலில் அங்கிருந்தவர்களின் உதவியால் சர்வேஷாவுக்கு குழந்தை பிறந்தது. இதன்பின்னர் தாயும் சேயும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

மீண்டும் ரகுவரனாக மாறும் தனுஷ்

தனுஷ், அமலாபால் நடிப்பில் வேல்ராஜ் இயக்கிய மிகப்பெரிய வெற்றி படம் 'வேலையில்லா பட்டதாரி'. இந்த படத்தில் தனுஷ் ரகுவரன்...

அரவிந்தசாமிக்கு பாடல் எழுதிய இரண்டு தலைமுறை கவிஞர்கள்

கடந்த 90கள் மற்றும் 2000-ல் பிரபல நடிகராக இருந்த அரவிந்தசாமி 'தனி ஒருவன்' படத்தில் ரீஎண்ட்ரி ஆனார். இந்த படம் கொடுத்த சூப்பர் ஹிட்...

விக்ரம் பிரபுவின் 'வீரசிவாஜி' ரிலீஸ் தேதி

விக்ரம்பிரபு நடித்த 'வீரசிவாஜி' படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகியுள்ள...

ஏ.ஆர்.முருகதாஸ்-மகேஷ்பாபு படத்தின் டைட்டில் என்ன?

பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் முதன்முதலில் இணைந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று...

வங்கி வாசலில் வரிசையில் நின்ற தாயின் ஒரு மாத குழந்தை மரணம்

மத்திய அரசின் ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் கள்ளநோட்டு மற்றும் கருப்புப்பணம் ஓரளவு ஒழிந்து கொண்டிருந்தாலும்...