ரஜினி குறித்த செய்திக்கு மறுப்பு தெரிவித்த 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' இயக்குனர்
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு முன்னரே வெளியான திரைப்படம் ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’. துல்கர் சல்மான், ரக்சன், ரிது வர்மா உள்பட பலர் நடித்திருந்த இந்த திரைப்படம் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பின்னும் இந்த படம் ஓடிடியில் ரிலீசாகி ஏராளமானவர்களின் பாராட்டுகளைப் பெற்றது என்பது தெரிந்ததே
இந்நிலையில் சமீபத்தில் ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குனர் தேசிங் பெரியசாமி அவர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் பாராட்டு தெரிவித்தார். இந்த படத்தை தாமதமாக தற்போது தான் பார்த்ததாகவும், படம் சூப்பராக இருப்பதாகவும், நீங்கள் பெரிய ஆளாக வருவீர்கள் என்றும் அவர் வாழ்த்து தெரிவித்தார். அதுமட்டுமின்றி தனக்கும் ஒரு கதை தயார் செய்யுங்கள் என்றும் அவர் கூறியிருந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஒருசில ஊடகங்களில் ரஜினி வாழ்த்து தெரிவித்ததற்கு நேரில் சென்று தேசிங் பெரியசாமி நன்றி தெரிவித்தார் என்று ரஜினியுடன் தேசிங் பெரியசாமி உள்ள புகைப்படத்தை பதிவு செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்த தேசிங் பெரியசாமி ரஜினியுடன் தான் உள்ள இந்த புகைப்படம் கடந்த 2018ம் ஆண்டு ஜனவரியில் எடுக்கப்பட்டது என்றும் தயவு செய்து இது போன்ற போலியான செய்திகளை பரப்ப வேண்டாம் என்றும் விளக்கமளித்துள்ளார்
I would like to clarify that it’s not true...out of concern they might have written like that...the photo was taken on January 2018..thank you pic.twitter.com/OWN5BRqD3k
— Desingh Periyasamy (@desingh_dp) August 2, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments