பனை ஓலை தொட்டில்கள்.....! குமரி மக்கள் அதிகம் விரும்ப காரணம் என்ன....?

  • IndiaGlitz, [Monday,August 30 2021]

கன்னியாகுமரி மாவட்டத்தில் பனை ஓலை தொட்டில்களை மக்கள் அதிகம் விரும்பி, பயன்படுத்திவருகிறார்கள். இந்த செய்திகள் தான் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

நம் தமிழகத்தின் மரமாக பனைமரம் விளங்கி வருகிறது. பனைமரங்களின் ஒவ்வொரு பாகத்தையும் கன்னியாகுமரி மக்கள் பயனுள்ள வகையில் பயன்படுத்துகிறார்கள். குமரியில் உள்ள பால்மா மக்கள் அமைப்பு சார்பாக தயாரிக்கப்படும் பனை ஓலை தொட்டில்களுக்கு, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த தொட்டிலின் பலன் என்னவெனில், குழந்தைகளை அதில் உறங்கவைக்கும் போது, எலும்பு தேய்தல், தசைப்பிடிப்பு, வாதப்பிரச்சனை, மனம் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் உடல் சோர்வு போன்ற பல நோய்களை குணப்படுத்தக்கூடிய தன்மை கொண்டது. சந்தைகளில் மற்ற தொட்டில்கள் இருந்தாலும், இத்தகைய மருத்துவ பயன்பாடுகள் கொண்ட பனை தொட்டில்களை குமரி மக்கள் விரும்பி பயன்படுத்துகிறார்கள். பெற்றோர்களும் தங்களுடைய குழந்தைகளின் ஆரோக்யத்தை கருத்தில் கொண்டு, இதை வாங்குவதால் பனை ஓலை தொட்டில் விற்பனை அங்கு அதிகரித்துள்ளது.
 

More News

2-ஆவது முறையாக புது படத்தில் இணைந்த பிரபல சகோதர நடிகர்கள்.....!

நடிகர் கார்த்தி நடிக்கும் புதிய படத்தை, அவரது அண்ணன் சூர்யா தயாரிக்கவுள்ளார்

தளபதி விஜய்யின் 'பீஸ்ட்' படத்தில் இணைந்த நடன இயக்குனர்!

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் சமீபத்தில் இந்த படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்த நிலையில் விரைவில்

'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு தளம்: த்ரிஷா வெளியிட்ட புகைப்படம்!

பிரமாண்ட இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பை ஜெயம் ரவி, விக்ரம் ஆகியோர்

சிவகார்த்திகேயன் - கெளதம் மேனன் படத்தை உறுதி செய்த தயாரிப்பு நிறுவனம்!

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர் கௌதம் மேனன் தற்போது சிம்பு நடித்துவரும் 'வெந்து தணிந்தது காடு' என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பதும் ஏற்கனவே அவர் விக்ரம் நடித்துவரும் 'துருவ நட்சத்திரம்'

'அரண்மனைக்குள்ள யாருடா? 'அரண்மனை 3' வீடியோ பாடல்

சுந்தர் சி இயக்கத்தில் உருவான 'அரண்மனை' மற்றும் 'அரண்மனை 2' ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் மூன்றாம் பாகம் தற்போது உருவாகி இருக்கிறது.