close
Choose your channels

கிறிஸ்துமஸ் ரிலீஸில் இணைந்த உதயநிதியின் 'கண்ணே கலைமானே'

Thursday, December 20, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இன்றும் நாளையும் கிறிஸ்துமஸ் திருவிழாவின் விருந்தாக ஐந்து புதிய படங்கள் வெளியாகின்றது. 'மாரி 2', 'கனா', 'அடங்கமறு', 'சீதக்காதி' மற்றும் சிலுக்குவார்பட்டி என ஐந்து படங்களும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதால் இந்த ரேஸில் வெற்றி பெறுவது யார் யார்? என்பதை அறிய அனைவரும் ஆவலுடன் உள்ளனர்.

இந்த நிலையில் மேலும் ஒரு கிறிஸ்துமஸ் விருந்தாக உதயநிதியின் 'கண்ணே கலைமானே' படத்தின் ஃபர்ஸ்ட்சிங்கிள் பாடல் வரும் 24ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினத்திற்கு முந்தைய நாள் வெளியாகவுள்ளது. இந்த தகவலை உதயநிதி ஸ்டாலின் உறுதி செய்துள்ளார்.

வைரமுத்து எழுதிய 'எந்தன் கண்களை காணோம்' என்ற இந்த மெலடி பாடலை யுவன்ஷங்கர் ராஜா கம்போஸ் செய்துள்ளார். இந்த பாடல் பெரும் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய விருது பெற்ற திரைப்படத்தை இயக்கிய சீனுராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். மேலும் காசி விஸ்வநாதன் படத்தொகுப்பில் ஜலந்தர் வாசன் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment