கண்ணன் ரவி குழுமத்தின் 'பராக்' உணவகம்: பிரமாண்டமான தொடக்கவிழா..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஐக்கிய அரபு அமீரகம் நாட்டில் தொழில் அதிபராக உள்ள தமிழர் கண்ணன் ரவி, துபாய் மற்றும் அபுதாபி நகரங்களில் பல்வேறு தொழில் செய்து வருகிறார் என்பதும் தெரிந்தது. இந்த நிலையில் அவர் தற்போது உணவு தொழிலில் கால் வைக்கும் நிலையில் முதலாவது ஃபுட் அண்ட் பேவரேஜஸ் யூனிட்டான 'பராக்' இந்தோ-அரேபிய உணவுகளை உள்ளடக்கிய உணவகம் மே 26ஆம் தேதி சிறப்பாக திறக்கப்பட்டது.
இந்த திறப்பு விழாவில் அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். குறிப்பாக வே வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கதிர் ஆனந்த், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான திரு.தொல் திருமாவளவன், தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் காமராஜ், நடிகர்கள் மற்றும் நடிகைகள் சரத்குமார்-ராதிகா சரத்குமார், பாக்யராஜ்-பூர்ணிமா பாக்யராஜ், பிரகாஷ் ராஜ்,சுந்தர்.சி,வெங்கட் பிரபு, விஷால், ஜெய், சாந்தனு-கீர்த்தி சாந்தனு, கீர்த்தி சுரேஷ்,பிரியா ஆனந்த், சித்தி இத்னானி, சாக்ஷி அகர்வால், அபர்னதி, இளவரசு, சதீஷ், 'ரோபோ'சங்கர், 'மஞ்ஞுமல் பாய்ஸ்' புகழ் சிஜு மற்றும் ஶ்ரீநாத் பாஸி, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, தயாரிப்பாளர்கள் அம்மா கிரியேஷன்ஸ் சிவா,சேவியர் பிரிட்டோ, ஜெகதீஷ் பழனிசாமி, நடிகர் ஜெயப்பிரகாஷ் , 'பஞ்சு' சுப்பு, இயக்குனர்கள் சித்ரா லக்ஷ்மணன்,கங்கை அமரன், நடன இயக்குனர்கள் ஶ்ரீதர் மற்றும் அக்ஷதா ஶ்ரீதர், யூடிபர்களான விக்னேஷ் காந்த் மற்றும் இர்ஃபான்,மருத்துவர் ஹரிஹரன், தொழில்முனைவோர் வெங்கட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பிரமாண்ட துவக்க விழாவை மாபெரும் வெற்றிகரமான நிகழ்வாக மாற்றி சிறப்பித்தனர்.
கண்ணன் ரவி குழுமத்தின் தலைவர் 'கண்ணன் ரவி' , தீபக் கண்ணன் ரவி இருவரும் விழாவிற்கு வந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவரையும் வரவேற்று, உபசரித்து, நன்றி தெரிவித்ததனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments