இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்: 'கண்ணகி'யில் அறிமுகமாகும் நடிகர் நெகிழ்ச்சி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
டிசம்பர் 15ஆம் தேதி வெளியாகும் ’கண்ணகி’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆதேஷ் சுதாகர் என்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினி குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதில் அவர் கூறியிருப்பதாவது:
இன்று நான் அறிமுகமாகும் படத்தின் பர்ஸ்ட் லுக்கை இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினிகாந்த் வெளியிட்டார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடைய குழந்தை பருவத்தில் இருந்தே அவருடைய ஒவ்வொரு அசைவையும் பின்பற்றி அவரது ஒவ்வொரு மூச்சிலும் உத்வேகத்தை கண்டேன்.
நான் சினிமா உலகிற்கு நுழையும் போது தலைவர் ’கண்ணகி’ படத்தின் டிரைலரை பார்த்து தனது அன்பையும் ஆதரவையும் எனக்கு அளித்துள்ளார். என் இதயத்தை நிரப்பும் மகிழ்ச்சியை விவரிக்க முடியாதது.
டிசம்பர் 15ஆம் தேதி திரைகளில் கண்ணகியை திரையில் பார்க்கலாம். இந்த மகிழ்ச்சியான தருணத்தில் என் தந்தை இல்லாததை நினைத்து வருந்துகிறேன். அவருடைய அன்பும் ஆசியையும் நான் ஆழமாக உணர்கிறேன். இந்த பயணத்தில் நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் அவரை பெருமைப்படுத்தும் வகையில் இருக்கும்.
மக்களான உங்கள் அன்பும் ஆதரவும் எனக்கு பெரிய பலத்தை கொடுக்கும். மேலும் டிசம்பர் 15 அன்று கண்ணகியை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள காத்திருக்கிறேன். இந்த பயணத்தை மறக்க முடியாததாக மாற்றுவோம்’ என்று பதிவு செய்துள்ளார்.
❤️🙏🏻#kannagi #SuperstarRajinikanth pic.twitter.com/uuHDlg6i8X
— Adhesh Sudhakar (@Adheshwar) December 12, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com