22 வயது இளம் நடிகை சாலை விபத்தில் மரணம்: அதிர்ச்சியில் திரையுலகம்

  • IndiaGlitz, [Wednesday,May 27 2020]

22 வயது இளம் நடிகை ஒருவர் சாலை விபத்தில் மரணமடைந்த செய்தி திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கன்னட தொலைக்காட்சி சீரியல் நடிகையாக இருந்து வந்தவர் மெதினா மைக்கேல். 22 வயதான இவர் தனது காரில் நண்பர்களுடன் தனது சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் சென்ற கார், டிராக்டர் ஒன்றுடன் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் காரில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். நடிகை மெதினாவின் நண்பர்கள் பலத்த காயத்துடன் உயிர் தப்பிய நிலையில் மெதினா மட்டும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்

இதனை அடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணையை தொடங்கி உள்ளனர். மெதினாவின் எதிர்பாராத மரணம் அவரது குடும்பத்தினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. அதுமட்டுமன்றி கன்னட தொலைக்காட்சி நட்சத்திரங்களை பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது

நடிகை மெதினா Pyaate Hudugir Halli Life என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு சாம்பியன் பட்டம் பெற்றவர் என்பதும் அவர் நடித்த சீரியல்கள் அனைத்தும் கன்னட தொலைக்காட்சி உலகில் பெரும் புகழ் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது