கமல், ரஜினியை கன்னட சூப்பர் ஸ்டார் சந்தித்தது ஏன்?
Send us your feedback to audioarticles@vaarta.com
கன்னட திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும், நடிகர் சிவராஜ்குமார் கோலிவுட் நடிகர்களிடம் அவ்வப்போது தொடர்பில் இருப்பார் என்பது அனைவரும் தெரிந்ததே. சமீபத்தில் சிவராஜ்குமார் 'வஜ்ரகயா' என்ற படத்தில் தமிழ் நடிகர் சிவகார்த்திகேயனுடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சிவராஜ்குமார் சமிபத்தில் உலக நாயகன் கமல்ஹாசனை நேரில் சந்தித்து பேசியுள்ளார். இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ள சிவராஜ்குமார், 'தன்னுடைய மகளின் திருமணத்திற்கு அழைப்பு விடுக்கவே, கமல்ஹாசனை நேரில் சந்தித்ததாக கூறியுள்ளார். உலக நாயகன் மட்டுமின்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன், தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ் மற்றும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்பட பல வி.ஐ.பிக்களை அவர் நேரில் சந்தித்து தனது மகள் திருமணத்தின் அழைப்பிதழை கொடுத்துள்ளார்.
சிவராஜ்குமாரின் மகள் நிருபமாவுக்கு வரும் ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதி பெங்களூரில் திருமணம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. நிருபமாவுக்கும் அவருடன் படித்த திலீப் என்பவருக்கும் இடையே சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com