பிரகாஷ்ராஜை அடுத்து சித்தார்த் இடம் மன்னிப்பு கேட்ட சூப்பர் ஸ்டார்.. ஒற்றுமையில் திரையுலகம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சித்தார்த் நேற்று கர்நாடக மாநிலத்தில் தான் நடித்த ’சித்தா’ என்ற படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது திடீரென கன்னடர்கள் சிலர் வந்து நிகழ்ச்சியை நிறுத்தினர்.
தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே உள்ள காவிரி பிரச்சனை காரணமாக இந்த நிகழ்ச்சியை நிறுத்துமாறு வலியுறுத்தினர். இதனால் வேறு வழி இல்லாமல் சித்தார்த் பத்திரிகையாளர் சந்திப்பை ரத்து செய்து விட்டு வெளியேறினார்.
இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த நிகழ்வுக்கு ஏற்கனவே நடிகர் பிரகாஷ் ராஜ் தனது சமூக வலைத்தளத்தில் வருத்தம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் மன்னிப்பு கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியபோது, ‘கன்னட திரையுலகினர் சார்பில் நடிகர் சித்தார்த் இடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இது போன்ற தவறு இனி நடக்காது. கனடா மக்கள் நல்ல மக்கள். அனைத்து மொழி படங்களையும் விரும்பி பார்ப்பவர்கள்’ என்று தெரிவித்துள்ளார்.
காவிரி நீர் பிரச்சனையில் தமிழகம் மற்றும் கர்நாடக அரசியல்வாதிகள் மத்தியில் கருத்து வேறுபாடு இருந்தாலும், இரு மாநிலத் திரையுலகினர்கள் ஒற்றுமையாக இருப்பது பாசிட்டிவாக பார்க்கப்படுகிறது.
.@NimmaShivanna apologies to Actor #Siddharth on behalf of Karnataka protesters 🥹❤️👏🏻#Chithha
— KARTHIK DP (@dp_karthik) September 29, 2023
pic.twitter.com/g8okbEIRNI
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments