கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமாரின் அடுத்த படத்தை இயக்கும் தமிழ் இயக்குனர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் அடுத்த திரைப்படத்தை தமிழ் இயக்குனர் ஒருவர் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கன்னட திரையுலகின் பல திரைப்படங்கள் தற்போது பான் - இந்தியா திரைப்படமாக வெற்றி பெற்று வருகின்றன என்பது குறிப்பாக ‘கேஜிஎப் மற்றும் காந்தாரா’ படங்கள் மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளன என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தை தமிழ் இயக்குனர் இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் அடுத்த படத்தை சுதீர் சந்திரா பிலிம் கம்பெனி என்ற நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தை கார்த்திக் அத்வைத் என்பவர் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே தமிழில் ’பாயுமொளி நீ எனக்கு’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ளதாகவும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் ஏற்கனவே தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘ஜெயிலர்’ என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. அதேபோல் தனுஷ் நடித்து வரும் ’கேப்டன் மில்லர்’ படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
Happy to announce our first project with Karunada Chakravarty @nimmaShivanna..
— Sudheer Chandra Film Company (@SCFilmCo) October 26, 2022
There are no dangerous weapons,
there are only dangerous men..
ಬಂದೂಕಿನ ಗುಂಡು ಅಪಾಯಕಾರಿಯಲ್ಲ,
ಅದನ್ನಿಡಿದಿರುವ ಗಂಡು ಅಪಾಯಕಾರಿ .....@KARTHIKFILMAKER@Sudheerbza @scfilmco @harishvn1 pic.twitter.com/j92XtUwzCs
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments