கன்னட சினிமாவிலும் போதைப்பொருள் சர்ச்சை… மனைவி மீது பிரபல தயாரிப்பாளர் புகார்!

  • IndiaGlitz, [Tuesday,June 27 2023]

தெலுங்கு சினிமா வட்டாரத்தில் போதைப்பொருள் சர்ச்சை தற்போது பூதாகரமாகி இருக்கும் நிலையில் கன்னட சினிமா துறையில் தயாரிப்பாளராக இருந்துவரும் சந்திரசேகர் என்பவர் தனது மனைவி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறியதோடு போதைப்பொரள் பயன்படுத்தி வருவதாகக் காவல் துறையில் புகார் அளித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கன்னட சினிமாவில் தயாரிப்பாளராக இருந்துவரும் சந்திரசேகர் என்பவர் தனது மனைவி நமீதாவிற்கும் போதைப்போருள் வியாபாரி லக்ஷிஷ் பிரபு என்பவருக்கும் இடையே தகாத உறவு இருப்பதாக சென்னம்மனேகெரே அச்சுகட்டு காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.

மேலும் போதைப்பொருள் பயன்படுத்த வேண்டாம் என்று தனது மனைவி நமீதாவை அவர் எச்சரித்ததாகவும் ஆனால் அதைப் பொருட்படுத்தாத அவர் லக்ஷிஷ் பிரபுவுடன் தகாத முறையில் தொடர்பு வைத்திருந்ததாகவும், ஒருமுறை அவரது வீட்டிலேயே இருவரையும் கையும் களவுமாக பிடித்ததாகவும் சந்திரசேகர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சந்திரேசேகர் கூறியுள்ள புகாரை மறுத்திருக்கும் அவரது மனைவி நமீதா, லக்ஷிஷ் பிரபு எனது நண்பர் மட்டுமே. எனது கணவரின் நண்பர்களான அருண் மற்றும் ஹேமந்த் இருவரும் எங்களைத் தாக்கினார்கள் என்று பதிலுக்கு புகார் அளித்திருக்கிறார். இப்படி இருதரப்புகளில் இருந்தும் புகார் அளிக்கப்பட்டு இருக்கும் நிலையில் போலீசார் இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

ஏற்கனவே தெலுங்கு சினிமா வட்டாரத்தில் போதைப்பொருள் வைத்திருந்த தயாரிப்பாளர் கே.பி.சவுத்ரி கைது செய்யப்பட்டு அவருடன் பல சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் எனப் பலரும் தொடர்புடன் இருப்பதாகத் தகவல் கூறப்படும் நிலையில் கன்னட சினிமா வட்டாரத்திலும் தற்போது போதைப்பொருள் சர்ச்சை கிளம்பி இருக்கிறது.

மனைவி போதைப்பொருள் வியாரிபாரியுடன் சேர்ந்து போதைப்பொருள் பயன்படுத்துவதாகவும் கூடவே தகாத உறவில் ஈடுபட்டு வருவதாகவும் சினிமா தயாரிப்பாளர் சந்திரசேகர் காவல் துறையில் புகார் அளித்திருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.