கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் மனைவி மரணம். திரையுலகினர் அஞ்சலி
Send us your feedback to audioarticles@vaarta.com
கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் அவர்கள் கடந்த 2006ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி மரணம் அடைந்த நிலையில் இன்று காலை அவருடைய மனைவி பர்வதம்மாள் காலமானார். இவர் கடந்த சில நாட்களாக உடல்நலம் இன்றி சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சையின் பலனின்று இன்று காலை அவர் மரணம் அடைந்ததாக உறவினர்கள் உறுதி செய்துள்ளனர். மறைந்த பர்வதம்மாள் உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பர்வதம்மாள் மறைவை முன்னிட்டு கர்நாடகாவில் இன்று படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
கடந்த 2000ஆம் ஆண்டு சந்தனக்கடத்தல் வீரப்பன் ராஜ்குமாரை கடத்தியபோது பர்வதம்மாளும் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் வீரப்பன், பர்வதம்மாள் அவர்களை கடத்தவில்லை என்பது குறிப்ப்பிடதக்கது.
ராஜ்குமார், பர்வதம்மாள் தம்பதிக்கு சிவராஜ்குமார், ராகவேந்திரா, புனித்ராஜ்குமார் ஆகிய மகன்களும், லட்சுமி, பூர்ணிமா ஆகிய மகள்களும் உள்ளனர். மகன்கள் மூன்று பேருமே கன்னட திரையுலகில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com