நடிகை மற்றும் காங்கிரஸ் பிரமுகர் கொலை.. தலைமறைவான கணவரால் பரபரப்பு..!

  • IndiaGlitz, [Tuesday,May 21 2024]

நடிகை மற்றும் காங்கிரஸ் பிரமுகர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு இருக்கும் நிலையில் அவரது கணவர் தலைமறைவாக இருப்பதாகவும் அவர்தான் நடிகையை கொலை செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

கன்னட திரை உலகில் சில படங்களில் நடித்தவர் நடிகை வித்யா. இவர் கர்நாடக மாநில காங்கிரஸ் பிரமுகராகவும் இருந்து வந்த நிலையில் மைசூரில் கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் மைசூரில் வசித்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று வித்யா மற்றும் அவரது கணவருக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டதாகவும் இதனால் இருவருக்கும் சண்டை வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஒரு கட்டத்தில் சண்டை முற்றியதால் வித்யாவை அவரது கணவர் கூறிய ஆயுதத்தால் கொலை செய்துவிட்டு தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.

இந்த கொலை குறித்த தகவல் அறிந்ததும் உடனடியாக சம்பவம் இடத்துக்கு வந்த காவல்துறை வித்யாவின் பிணத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருவதாக தெரிகிறது.

வித்யாவின் கணவர் நந்திஷ் என்றும், அவரை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. நந்திஷ் - வித்யா தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில் அவர்களது எதிர்காலம் குறித்து உறவினர்கள் கவலை அடைந்துள்ளனர்.

கன்னட திரைப்படங்களில் நடித்து வந்ததோடு காங்கிரஸ் கட்சியிலும் பிரமுகராக இருந்த வித்யா, திடீரென கணவரால் கொலை செய்யப்பட்டிருப்பது கன்னட திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

 

More News

கர்ப்பப்பையில் 10 செமீ கட்டி.. விவாகரத்தான கணவரின் உதவியால் உயிர் பிழைத்த பிரபல நடிகை..!

பிரபல பாலிவுட் நடிகைக்கு கர்ப்பப்பையில் புற்றுநோய் கட்டி இருந்ததாக கூறப்படும் நிலையில் அவரது முதல் கணவரின் உதவியால் சிகிச்சை பெற்று தற்போது நலமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  

நான் நாய் தான், சோறு போட்டுவளத்தவங்களுக்கு விசுவாசமாக இருக்க மட்டும் தான் தெரியும்: 'கருடன்' டிரைலர்..!

சூரி நடித்த 'கருடன்' திரைப்படம் வரும் 31ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த ட்ரைலரில் இத்தனை வருடங்களாக காமெடி

குக் வித் கோமாளி சீசன் 5 போட்டியாளருக்கு தமிழக அரசு நோட்டீஸ்? காவல்துறை நடவடிக்கையா?

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யூடியூபர் இர்பான் தனது சமூக வலைத்தளத்தில் தனக்கு பிறக்க போகும் குழந்தையின் பாலினத்தை அறிவித்ததாக கூறிய நிலையில் அவர்

'இந்தியன் 2' ஃபர்ஸ்ட் சிங்கிள்.. 'பாரா' பாடலின் பாடகர், பாடலாசிரியர் யார்? 

.உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவான 'இந்தியன் 2 'படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ஜூலை 12ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். 

500 படங்கள் நடித்த நடிகரின் சாதனையை முறியடியுங்கள்: மோகன்லாலுக்கு வாழ்த்து கூறிய கமல்..!

400 படங்கள் என்ற மைல்கல்லை தொட்டுள்ள மோகன்லால் 500 படங்கள் நடித்த நடிகரின் சாதனையை முறியடிக்க வேண்டும் என்று உலகநாயகன் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் அவருக்கு