நடிகை தற்கொலைக்கு காதலர் காரணமா? பிரேத பரிசோதனையில் தெரிந்த உண்மை!

  • IndiaGlitz, [Tuesday,October 19 2021]

பிரபல நடிகை ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவரது தற்கொலைக்கு அவரது காதலர் தான் காரணம் என குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் சில உண்மைகள் தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பிரபல நடிகை சவுஜன்யா என்பவர் கன்னட சினிமாவில் பிரபலமாக இருந்தவர் என்பதும் கன்னட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி இவர் திடீரென தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். மேலும் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில் சொந்த காரணங்களுக்காக தற்கொலை முடிவை எடுத்திருப்பதாகவும் கூறியிருந்தார்.

இருப்பினும் தனது மகள் சவுஜன்யா தற்கொலை செய்யவில்லை என்றும் அவரை கொலை செய்தது அவரது காதலர் தான் என்றும் சவுஜன்யாவின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் சௌந்தர்யாவின் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருந்தனர்.

இந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் சவுஜன்யா தற்கொலை செய்து கொண்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் கொலை செய்யப்படவில்லை என்ற முடிவை போலீசார் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.