ஊரடங்கு நேரத்தில் 10 ஆண்டு கால நண்பரை திருமணம் செய்த பிரபல நடிகை!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்த ஊரடங்கு நேரத்திலும் வெகு அரிதாக ஒரு சில திருமணங்கள் எளிமையாக நடந்து வரும் நிலையில் பிரபல நடிகை ஒருவரின் திருமணம் நடந்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் உள்ளாகிவிட்டது
பிரபல கன்னட நடிகை மயூரி கயட்டாரி (Mayuri Kyatari) என்பவருக்கு இன்று பெங்களூரில் மிக எளிமையாக திருமணம் நடந்தது. தனது பத்தாண்டு கால நண்பரும் தொழிலதிபருமான அருண் என்பவரை அவர் இன்று திருமணம் செய்து கொண்டார்
இந்தத் திருமணம் கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் உள்ள கோவில் ஒன்றில் இருதரப்பு உறவினர்கள் மத்தியில் மிக எளிமையாக நடந்தது. ஊரடங்கு நேரம் என்பதால் மிகக்குறைந்த நபர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
25 வயதான நடிகை மயூரி கயட்டாரி இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது ’ஆம் இன்று எனக்கு திருமணம் நடந்துள்ளது. 10 ஆண்டுகால நட்பு தற்போது அர்த்தமுள்ள திருமண உறவாக மாறியுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார். நடிகை மயூரி கயட்டாரிக்கு திருமணம் நடைபெற்றதை அடுத்து அவரது ரசிகர்களும் கன்னட திரையுலகினரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments