கன்னட சீரியல் நடிகை திடீர் தற்கொலை… சொந்த வாழ்க்கை காரணமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
கன்னட தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துவந்த நடிகை சௌஜன்யா திடீரென்று தனது அடுக்குமாடிக் குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனால் கன்னட மொழி வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.
சீரியல் தொடர்களில் நடித்துவந்த நடிகை செளஜன்யாவிற்கு சமீபகாலமாக அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர் விரக்தியடைந்து தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு காரணங்கள் இருக்கிறதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
சமீபகாலமாக சினிமா பிரபலங்கள் தற்கொலை செய்துகொள்ளும் விவகாரம் அதிகரித்துள்ள நிலையில் நடிகை சௌஜன்யா தான் மனஉளைச்சலுக்கு ஆளானதாகக் கடிதம் மூலம் தெரியப்படுத்தி உள்ளார். என்னுடைய தற்கொலைக்கு யாரையும் குற்றம் சுமத்த வேண்டாம். நான் மட்டுமே பொறுப்பு. வேறெந்த உடல்நலப் பிரச்சனையும் எனக்கில்லை. வாழ்க்கையில் எதிர்கொண்டவற்றால் மனதளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறேன். மேலும் எனக்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றி எனக் குறிப்பிட்ட அவர் தன்னுடைய பெற்றோரிடம் மன்னிப்பு கோரியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
சீரியல் நடிகை சௌஜன்யா தற்கொலை விவகாரம் தற்போது கன்னட சினிமா வட்டாரத்தில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் நட்சத்திரங்கள் பலரும் அவரது இறப்புக்கு வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com