கன்னட சினிமாவிலும் பாலியல் தொல்லை.. மகளிர் ஆணையத்திடம் புகார் அளித்த பிரபல நடிகை..!

  • IndiaGlitz, [Thursday,September 19 2024]

மலையாள சினிமாவில் பாலியல் தொல்லை இருப்பது உண்மை என ஹேமா கமிஷன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா துறைகளில் உள்ள சில நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைக்கத் தொடங்கிய நிலையில், தற்போது கன்னட சினிமா துறையிலும் பாலியல் தொல்லை உள்ளது என புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நடிகை நிக்கி கல்ராணி சகோதரி சஞ்சனா கல்ராணி மகளிர் ஆணையத்திடம் கன்னட சினிமாவில் பாலியல் தொல்லை குறித்து புகார் அளித்துள்ளார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கன்னட திரையுலகில் பெண்களுக்கு என தனிப்பட்ட அமைப்பு இல்லை. எனது அறக்கட்டளை வழியாக சுதந்திரமான அமைப்பை உருவாக்குவேன். மேலும், திரைத்துறையில் நுழையும் புதுமுகங்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டு, “சான்டல்வுட் வுமன் ஆர்டிஸ்ட் அசோசியேசன்” என்ற அமைப்பை உருவாக்குவோம் என்றும் கூறியுள்ளார்.

மொத்தத்தில் தென்னிந்திய திரையுலகம் முழுவதும் பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருவது பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

More News

சூர்யாவின் 'கங்குவா' ரிலீஸ் தேதி இதுதான்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

சூர்யா நடித்த 'கங்குவா' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இன்று காலை 11 மணிக்கு அறிவிக்கப்படும் என நேற்று வெளியான தகவலின்படி, சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பகத் பாசில், ரானா கேரக்டர்கள்.. செகண்ட் சிங்கிள் ரிலீஸ்.. அடுத்தடுத்து வரும் 'வேட்டையன்' அப்டேட்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, வரும் அக்டோபர் மாதம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக  ரிலீஸ் ஆக இருக்கிறது.

குக் வித் கோமாளி பிரச்சனை.. முதன்முதலாக பிரியங்காவுக்கு ஆதரவாக பிரபலத்தின் குரல்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இடையே பிரச்சனை வந்ததாக கூறப்படும் நிலையில் இது குறித்து பல்வேறு

2 மாத உழைப்பை வீண் பண்ணிட்டிங்களே.. லோகேஷ் கனகராஜின் வேதனை பதிவு..!

எங்களது 2 மாத உழைப்பை வீணாக்கி விட்டீர்கள். இனிமேலும் இதுபோல் செய்யாதீர்கள் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் வேதனையுடன் பதிவு செய்துள்ளார்.

சூர்யாவின் 'கங்குவா' ரிலீஸ் எப்போது? தயாரிப்பு நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு..!

நடிகர் சூர்யா நடித்த 'கங்குவா' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முழுமையடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் இந்த படம் முதலில் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ்