கன்னட சினிமாவிலும் பாலியல் தொல்லை.. மகளிர் ஆணையத்திடம் புகார் அளித்த பிரபல நடிகை..!

  • IndiaGlitz, [Thursday,September 19 2024]

மலையாள சினிமாவில் பாலியல் தொல்லை இருப்பது உண்மை என ஹேமா கமிஷன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா துறைகளில் உள்ள சில நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைக்கத் தொடங்கிய நிலையில், தற்போது கன்னட சினிமா துறையிலும் பாலியல் தொல்லை உள்ளது என புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நடிகை நிக்கி கல்ராணி சகோதரி சஞ்சனா கல்ராணி மகளிர் ஆணையத்திடம் கன்னட சினிமாவில் பாலியல் தொல்லை குறித்து புகார் அளித்துள்ளார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கன்னட திரையுலகில் பெண்களுக்கு என தனிப்பட்ட அமைப்பு இல்லை. எனது அறக்கட்டளை வழியாக சுதந்திரமான அமைப்பை உருவாக்குவேன். மேலும், திரைத்துறையில் நுழையும் புதுமுகங்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டு, “சான்டல்வுட் வுமன் ஆர்டிஸ்ட் அசோசியேசன்” என்ற அமைப்பை உருவாக்குவோம் என்றும் கூறியுள்ளார்.

மொத்தத்தில் தென்னிந்திய திரையுலகம் முழுவதும் பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருவது பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.