நுரையீரல் புற்று நோயுடன் போராடி வந்த பிரபல நடிகை காலமானார்.. முதலமைச்சர் இரங்கல்..!
- IndiaGlitz, [Friday,July 12 2024]
கடந்த சில ஆண்டுகளாக நுரையீரல் புற்று நோயுடன் போராடி வந்த நடிகை காலமானார் என்ற செய்தி திரையுலகினர்களை அதிர்ச்சியில் ஏற்படுத்திய நிலையில் அவரது மறைவுக்கு கர்நாடக முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி அதன் பின் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அபர்ணா வஸ்த்ரே. இவர் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமாகி அதன் பிறகு கன்னட திரை உலகில் சில படங்கள் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பல அரசு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பணிபுரிந்துள்ளார்.
மேலும் கடந்த 2013ஆம் பிக் பாஸ் கன்னடம் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பதும் 41 நாட்களில் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எவிக்சன் செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக நுரையீரல் புற்றுநோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அபர்ணா நேற்று இரவு காலமானார். இந்த தகவலை அவரது கணவர் நாகராஜ் உறுதி செய்துள்ளார். இந்த நிலையில் அபர்ணா மறைவு கன்னட திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உட்பட பல அரசியல் பிரபலங்களும் திரையுலக பிரபலமான மாவட்ட இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அபர்ணா மறைவுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, ‘நடிகை, பிரபல தொகுப்பாளினி அபர்ணாவின் மரணச் செய்தி கேட்டு வருத்தமடைந்தேன். கன்னடத்தின் முக்கிய சேனல்கள் மற்றும் அரசு விழாக்களில் மிக நேர்த்தியாக கன்னட மொழியில் பேசி நம்மை கவர்ந்தவர். மாநிலம் முழுவதும் பிரபலமான பன்முகத் திறமையாளர் மிக விரைவில் நம்மை விட்டுப் பிரிந்தார். அவரின் ஆன்மா சாந்தி அடையட்டும் என்று தெரிவித்துள்ளார்.
ನಟಿ, ಖ್ಯಾತ ನಿರೂಪಕಿ ಅಪರ್ಣಾ ಅವರ ನಿಧನದ ಸುದ್ದಿ ತಿಳಿದು ನೋವಾಯಿತು. ಸರ್ಕಾರಿ ಸಮಾರಂಭಗಳು ಸೇರಿದಂತೆ ಕನ್ನಡದ ಪ್ರಮುಖ ವಾಹಿನಿಗಳ ಕಾರ್ಯಕ್ರಮಗಳಲ್ಲಿ ಕನ್ನಡ ಭಾಷೆಯಲ್ಲಿ ಅತ್ಯಂತ ಸೊಗಸಾಗಿ ನಿರೂಪಣೆ ಮಾಡುತ್ತಾ ನಾಡಿನ ಮನೆಮಾತಾಗಿದ್ದ ಬಹುಮುಖ ಪ್ರತಿಭೆಯೊಂದು ಬಹುಬೇಗ ನಮ್ಮನ್ನು ಅಗಲಿರುವುದು ದುಃಖದ ಸಂಗತಿ.
— Siddaramaiah (@siddaramaiah) July 11, 2024
ಮೃತ ಅಪರ್ಣಾಳ ಆತ್ಮಕ್ಕೆ ಶಾಂತಿ… pic.twitter.com/fZs9L6m42Q