close
Choose your channels

'கே.ஜி.எஃப் 2' ரிலீஸ் தேதியின் அதிகாரபூர்வ அறிவிப்பு!

Friday, January 29, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல கன்னட நடிகர் யாஷ் நடித்த கேஜிஎப் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மற்றும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என ஏற்கனவே என்று படக்குழுவினர் தகவல் தெரிவித்து இருந்தனர். அதன்படி சற்று முன்னர் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

கேஜிஎப் 2 திரைப்படம் ஜூலை 16ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக படக்குழுவினர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். யாஷ், சஞ்சய்தத், ஸ்ரீநிதி ஷெட்டி, ரவீனா டண்டன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ரவிபஸ்ரூர் என்பவர் இசையமைத்துள்ளார். சுமார் 120 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள இந்தப் படம் முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகமும் மிகப் பெரிய வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment