சுற்றுலா சென்ற இடத்தில் மாரடைப்பால் மரணம்.. பிரபல நடிகரின் மனைவிக்கு நேர்ந்த சோகம்..!

  • IndiaGlitz, [Monday,August 07 2023]

பிரபல நடிகர் தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா சென்ற நிலையில் திடீரென அவரது மனைவி மாரடைப்பால் மரணம் அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கன்னடத் திரையுலகில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் விஜய ராகவேந்திரா. இவர் தனது மனைவி ஸ்பந்தனா மற்றும் மகனுடன் தாய்லாந்து நாட்டுக்கு சுற்றுலா சென்ற நிலையில் ஸ்பந்தனாவுக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் பாங்காங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சையின் பலன் இன்றி காலமானார். இதனால் கன்னட திரையுலகினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

இந்த நிலையில் தாய்லாந்தில் காலமான ஸ்பந்தனாவின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர அவரது உறவினர்கள் ஏற்பாடு செய்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

கன்னடத் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் விஜய் ராகவேந்திரா காவல்துறை அதிகாரி ஸ்பந்தனா என்பவரை கடந்த 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. விஜய ராகவேந்திரா -ஸ்பந்தனா ஜோடியின் 16வது திருமண நாள் இன்னும் ஒரு சில நாட்களில் வர இருக்கும் நிலையில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.