தமிழக முதல்வரை சந்தித்த புனித் ராஜ்குமாரின் சகோதரர்: என்ன காரணம்?

  • IndiaGlitz, [Sunday,February 13 2022]

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திடீரென மாரடைப்பில் உயிரிழந்த கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் சகோதரர் சிவராஜ்குமார் இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை சந்தித்து உள்ளார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தம் என கூறப்படுகிறது.

கன்னட சூப்பர் ஸ்டாராக விளங்கிய புனித் ராஜ்குமார் திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது கன்னட திரையுலகிற்கு மட்டுமின்றி இந்திய திரையுலகையே பேரிழப்பாக கருதப்பட்டது. இந்த நிலையில் புனித் ராஜ்குமாரின் கடைசி திரைப்படமான ’ஜேம்ஸ்’ முதன்முதலாக தமிழில் டப் செய்யப்பட்டு மார்ச் 17ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி தமிழக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை புனித் ராஜ்குமாரின் சகோதரர் சிவராஜ்குமார் தனது மனைவியுடன் சென்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது முதலமைச்சரின் மனைவியும் இருந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்பட்டாலும் முதல்வரிடம் சிவராஜ்குமார் முக்கிய கோரிக்கை ஒன்று வைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ‘ஜேம்ஸ்’ படத்தின் தமிழ் பதிப்பு ரிலீஸ் ஆவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி இருக்கலாம் என்றும் அல்லது அரசியல் ரீதியான சந்திப்பாக கூட இருக்கலாம் என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் சிவராஜ்குமார் இந்த சந்திப்பு குறித்து விரைவில் பேட்டி அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக உதயநிதி ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெங்களூர் சென்று புனித் ராஜ்குமாரின் சமாதிக்கு மரியாதை செலுத்தினார் என்பதும் இவ்வளவு சின்ன வயதில் ஒரு சூப்பர் ஸ்டாரை நாம் இழந்துவிட்டது மிகப்பெரிய துரதிர்ஷ்டம் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது