close
Choose your channels

கொலை வழக்கில் கைதான பிரபல நடிகர்.. சிறையில் சொகுசு வாழ்க்கை வாழும் அதிர்ச்சி புகைப்படம்..!

Monday, August 26, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொலை வழக்கில் கைதான பிரபல நடிகர் சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பதாக வெளியாகி இருக்கும் புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல கன்னட நடிகர் தர்ஷன், ரேணுகா சாமி என்பவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் இந்த கொலை வழக்கில் நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கௌடா உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கின் விசாரணை விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் பெங்களூரு சிறையில் இருக்கும் தர்ஷன் திறந்த வெளியில் நாற்காலியில் உட்கார்ந்து அரட்டை அடித்து கொண்டு தேநீர் அருந்தும் புகைப்படம், வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

தர்ஷன் அருகே ரவுடி வில்சன் மற்றும் தர்ஷனின் மேனேஜர் நாகராஜ் ஆகியோர் அரட்டை அடித்துக் கொண்டிருக்கும் காட்சியும் உள்ள நிலையில் இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பெங்களூரு சிறையின் ஜெயிலர் உள்பட ஏழு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment