ஊரடங்கு நேரத்தில் நடந்த இளம் நடிகர்-நடிகையின் காதல் திருமணம்

கன்னட திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர் மற்றும் நடிகையாக இருந்து வருபவர்கள் அர்னவ் வினாயஸ் மற்றும் விஹானா. இவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்த நிலையில் இருவரின் பெற்றோர்களும் இந்த காதலுக்கு பச்சைக்கொடி காட்டி திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு திடீரென பிறப்பிக்கப்பட்டதை அடுத்து திட்டமிட்டபடி பிரமாண்டமாக இவர்களது திருமணத்தை நடத்த முடியவில்லை. இருப்பினும் இந்த திருமணத்தை ரத்து செய்யாமல் எளிமையாக நடத்த இருவீட்டார்களும் முடிவு செய்தனர். அதன்படி மணமகள் ஊரில் அர்னவ் மற்றும் விஹானா திருமணம் நேற்று எளிமையாக நடைபெற்றது.

மணமகன், மணமகள் ஆகிய இருவரும் மாஸ்க் அணிந்து திருமணம் செய்து கொண்டனர். அதேபோல் இந்த திருமணத்திற்கு இருவீட்டார்களுக்கு மிகவும் நெருக்கமான வெகுசிலரே இந்த திருமணத்தில் கலந்து கொண்டார்கள் என்பதும் அவர்களும் மாஸ்க் அணிந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நட்சத்திர ஜோடிக்கு கன்னட திரையுலகினர் சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.