close
Choose your channels

'கண்ணா லட்டு தின்ன ஆசையா' நடிகைக்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தால் அதிர்ச்சி..!

Tuesday, April 11, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சந்தானம் நடித்த ’கண்ணா லட்டு தின்ன ஆசையா’ என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்த நடிகை விசாகா சிங் மருத்துவமனையில் படுத்த படுக்கையாக இருக்கும் புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடையிலுள்ளனர்.



கடந்த 2007 ஆம் ஆண்டு ’ஞாபகம்’ என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான விசாகா சிங், ‘பிடிச்சிருக்கு’ என்ற தமிழ் படம் உள்பட பல படங்களில் நடித்தார். இதனை அடுத்து சந்தானத்துடன் அவர் நடித்த ’கண்ணா லட்டு தின்ன ஆசையா’ என்ற திரைப்படம் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

இதனை அடுத்து சந்தானம் நடித்த மற்றொரு திரைப்படமான ’வாலிப ராஜா’ என்ற திரைப்படத்தில் அவர் நாயகியாக நடித்தார். மேலும் தெலுங்கு ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்துள்ளார்.



இந்த நிலையில் நடிகை விசாகா சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மருத்துவமனையில் படுத்த படுக்கையாக இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது: நான் நீண்ட நேரம் கீழே மற்றும் வெளியே இருக்க முடியாது... கால மாற்றத்தால் அடிக்கடி நடக்கும் வினோதமான சம்பவங்கள் விபத்து மற்றும் உடல்நல பிரச்சனைகளுக்கு பிறகு, மகிழ்ச்சியான ஆரோக்கியமான கோடையை நோக்கி திரும்புகிறது. ஏப்ரல் எப்போதுமே எனக்கு உண்மையான புத்தாண்டாக இருந்திருக்கிறது. ஒரு வேலை இது புதிய நிதியாண்டு என்பதால் என்பதாலோ அல்லது எனது பிறந்த மாதத்தின் முன் மாதம் என்பதால், கோடை நாட்கள் நோக்கி முழு ஆர்வத்துடன் முன்னேறி, வருகிறேன்' என்று கூறியுள்ளார்.



இதனை அடுத்து நடிகை விசாகா சிங், விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment