'கண்மணி ஓகேவா? சம்மதம் பெற்று தாலி கட்டிய தொகுப்பாளர்.. சீரியல் நடிகையின் திருமண வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
’கண்மணி ஓகே வா’ என சீரியல் நடிகையிடம் அனுமதி வாங்கி அதன் பின்னர் பிரபல தொகுப்பாளர் தாலி கட்டிய வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி வருகிறது.
சன் டிவியில் பிரபல தொகுப்பாளரான அஸ்வத் என்பவருக்கும் சீரியல் நடிகையான கண்மணி மனோகரன் என்பவருக்கும் இடையே கடந்த ஜூன் மாதம் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் தற்போது இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது.
’பாரதி கண்ணம்மா’ சீரியலில் அஞ்சலி என்ற கேரக்டரிலும், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ’அமுதாவும் அன்னலட்சுமியும்’ என்ற சீரியலிலும் நடித்து வரும் கண்மணி மனோகரன் என்பவர், சன் டிவி தொகுப்பாளரான அஸ்வத்துடன் சில ஆண்டுகள் காதலில் இருந்த நிலையில் தற்போது இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது.
இந்த திருமணம் குறித்த வீடியோ கண்மணியின் சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வீடியோவில் சில ஜாலியான காட்சிகள் உள்ளன. அதன் பிறகு இறுதியில் தாலி கட்டும்போது ’கண்மணி ஓகே வா’ என்று அவரிடம் அனுமதி வாங்கி அஸ்வத் தாலி கட்டியுள்ளார். இந்த வீடியோ தற்போது மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வரும் நிலையில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான லைக் குவிந்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments