மணக்கோலத்தில் பிரபல செய்தி வாசிப்பாளர்: வைரலாகும் புகைப்படம்
- IndiaGlitz, [Thursday,June 10 2021]
பெரிய திரை நடிகர்கள் நடிகைகள் போலவே சின்னத்திரை நடிகைகளும், சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கிறார்கள் என்பதும் அதேபோல் தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் தொகுப்பாளினிகள் மற்றும் செய்தி வாசிப்பாளர்களும் சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்களை அதிகப்படுத்தி வருகிறார்கள் என்பதும் தெரிந்ததே
அந்த வகையில் தற்போதைய செய்தி வாசிப்பாளர்களில் முன்னணி செய்திவாசிப்பாளர்களில் ஒருவரான கண்மணியின் சமூக வலைதள பக்கம் பிரபலமாகி வருகிறது. குறிப்பாக அவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருப்பதை அடுத்து அவரது பக்கத்தில் ஃபாலோயர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறார்கள் என்பதும் அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் செய்தி வாசிப்பாளர் கண்மணி சமீபத்தில் திருமண கோலத்தில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது ஃபாலோயர்கள் எப்போது திருமணம்? யார் மாப்பிள்ளை? என்று கமெண்ட்ஸ்களில் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். கண்மணி தனது திருமணம் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியிடுவாரா? அல்லது இதுவொரு சாதாரண போட்டோஷூட் புகைப்படமா? என்பது விரைவில் தெரிய வரும்.