ஏ.ஆர்.முருகதாஸ்-ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணையும் அதர்வா

  • IndiaGlitz, [Tuesday,January 26 2016]

அதர்வா நடித்த ஒருசில படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்ததை அடுத்து அவரையும் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாற்றியது 'ஈட்டி' என்ற சூப்பர் ஹிட் திரைப்படம். இந்த படத்தின் வெற்றிக்கு பின்னர் அவர் நடித்து கொண்டிருந்த மற்ற படங்கள் விறுவிறுப்பாக முடிக்கப்பட்டன. அவற்றில் ஒரு படம்தான் 'கணிதன்'

விஞ்ஞான கான்செப்ட் படமான இந்த படத்திற்காக அதர்வா மற்றும் படக்குழுவினர் கடுமையாக உழைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை அதாவது ஜனவரி 27ஆம் தேதிசென்னையில் நடைபெறவுள்ளது.

இந்த படத்தின் முதல் இசை டிவிடியை ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட அதை இந்தியாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர்.முருகதாஸ் பெற்றுக் கொள்கிறார்.

அதர்வா, கேதரின் தெரசா, தரூன் அரோரா, கே.பாக்யராஜ், மனோபாலா, கருணாகரன், ஒய்.ஜி.மகேந்திரா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை டி.என். சந்தோஷ் இயக்கியுள்ளார். கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இந்த படத்திற்கு டிரம்ஸ் சிவமணி இசையமைத்துள்ளார்.