அஜித்தின் அரசியல் தெளிவு அறிக்கை குறித்து கனிமொழி கருத்து
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் ரசிகர்கள் சிலர் பாஜகவில் சேர்ந்ததாக வெளிவந்த செய்தியை அடுத்து பல்வேறு யூகங்களுடன் வதந்திகள் நேற்று வெளியானது. இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அளவில் நேற்று அஜித் ஒரு தெளிவான அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
அந்த அறிக்கையில் நான் தனிப்பட்ட முறையிலோ, அல்லது நான் சார்ந்த திரைப்படங்களில் கூட அரசியல்சாயம் வந்துவிடக்கூடாது என்பதில் தீர்மானமாக உள்ளவன் என்பது அனைவரும் அறிந்ததே. என்னுடைய தொழில் சினிமாவில் நடிப்பது மட்டுமே என்பதை நான் தெளிவாக புரிந்து வைத்து இருப்பதே இதற்கு காரணம்.
சில வருடங்களுக்கு முன்னர் என் ரசிகர் இயக்கங்களை நான் கலைத்ததும் இந்த பின்னணியில் தான். என்மீதோ, என் ரசிகர்கள் மீதோ, என் ரசிகர் இயக்கங்களின் மீதோ எந்தவிதமான அரசியல் சாயம் வந்துவிடக்கூடாது என்று நான் சிந்தித்ததன் சீரிய முடிவு அது என்று அஜித் குறிப்பிட்டிருந்தார்.
அரசியலில் குதிக்க போவதாக தங்களது ரசிகர்களை பல வருடங்களாக ஏமாற்றி கொண்டிருக்கும் ரசிகர்கள் மத்தியில் அஜித்தின் இந்த தெளிவான அறிக்கைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அந்த வகையில் திமுக எம்பி கனிமொழி அஜித்தின் அறிக்கை குறித்து கருத்து தெரிவித்தபோது, 'அஜித் சிறந்த நடிகர், அரசியல் குறித்த அவரது கருத்துக்கு நன்றி; அரசியலில் ஈடுபட மாட்டேன் என அஜித் முடிவு எடுத்திருப்பது நல்ல முடிவு' என்று கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments