அஜித்தின் அரசியல் தெளிவு அறிக்கை குறித்து கனிமொழி கருத்து

  • IndiaGlitz, [Tuesday,January 22 2019]

அஜித் ரசிகர்கள் சிலர் பாஜகவில் சேர்ந்ததாக வெளிவந்த செய்தியை அடுத்து பல்வேறு யூகங்களுடன் வதந்திகள் நேற்று வெளியானது. இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அளவில் நேற்று அஜித் ஒரு தெளிவான அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

அந்த அறிக்கையில் நான் தனிப்பட்ட முறையிலோ, அல்லது நான் சார்ந்த திரைப்படங்களில் கூட அரசியல்சாயம் வந்துவிடக்கூடாது என்பதில் தீர்மானமாக உள்ளவன் என்பது அனைவரும் அறிந்ததே. என்னுடைய தொழில் சினிமாவில் நடிப்பது மட்டுமே என்பதை நான் தெளிவாக புரிந்து வைத்து இருப்பதே இதற்கு காரணம்.

சில வருடங்களுக்கு முன்னர் என் ரசிகர் இயக்கங்களை நான் கலைத்ததும் இந்த பின்னணியில் தான். என்மீதோ, என் ரசிகர்கள் மீதோ, என் ரசிகர் இயக்கங்களின் மீதோ எந்தவிதமான அரசியல் சாயம் வந்துவிடக்கூடாது என்று நான் சிந்தித்ததன் சீரிய முடிவு அது என்று அஜித் குறிப்பிட்டிருந்தார்.

அரசியலில் குதிக்க போவதாக தங்களது ரசிகர்களை பல வருடங்களாக ஏமாற்றி கொண்டிருக்கும் ரசிகர்கள் மத்தியில் அஜித்தின் இந்த தெளிவான அறிக்கைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அந்த வகையில் திமுக எம்பி கனிமொழி அஜித்தின் அறிக்கை குறித்து கருத்து தெரிவித்தபோது, 'அஜித் சிறந்த நடிகர், அரசியல் குறித்த அவரது கருத்துக்கு நன்றி; அரசியலில் ஈடுபட மாட்டேன் என அஜித் முடிவு எடுத்திருப்பது நல்ல முடிவு' என்று கூறியுள்ளார்.

More News

'பேட்ட' படம் பார்த்த ரஜினி ரசிகரை அடித்து கொலை செய்தவர் கைது!

திரையரங்கில் ரஜினியின் 'பேட்ட' திரைப்படத்தை சிகரெட் பிடித்தபடியே பார்த்த ரஜினி ரசிகர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்

யுவன்ஷங்கர் ராஜாவின் அடுத்த பட ஆல்பம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடிப்பில் இயக்குனர் சீனுராமசாமி இயக்கிய 'கண்ணே கலைமானே' திரைப்படம் வரும் பிப்ரவரியில் வெளியாகவுள்ளது.

பிக்பாஸ் ரித்விகாவுக்கு திருமணம் எப்போது? அவரே அளித்த பதில்

பிக்பாஸ் இரண்டாவது சீசனின் வெற்றியாளராகி பலரின் மனதை கொள்ளையடித்த நடிகை ரித்விகா தற்போது ஒருசில படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

'வாழு, வாழவிடு': அரசியல் குறித்து அஜித்குமார் அறிக்கை

நடிகர் அஜித்குமார் அரசியல் மற்றும் பிற நடிகர்களை கடுமையாக விமர்சனம் செய்வது குறித்து நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தனுஷின் 'அசுரன்' படப்பிடிப்பு தொடங்கும் தேதி அறிவிப்பு

கடந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய 'வடசென்னை' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் மீண்டும் தனுஷ், வெற்றிமாறன் ஒரு படத்தில் இணையவுள்ளதாகவும்