கருத்து சுதந்திரத்திலும், கலையிலும் யாரும் தலையிட கூடாது: கனிமொழி
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்தில் இடம்பெற்ற ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு குறித்த வசனத்திற்கு பாஜக தலைவர்கள் தெரியாமல் எதிர்ப்புவிட்டு கடந்த இரண்டு நாட்களாக வாங்கி கட்டிக்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக விஜய் பெயரை ஜோசப் விஜய் என்று குறிப்பிட்டு தங்கள் மதவாதத்தையும் தாங்களே வெளிப்படுத்தி கொண்டதாக விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் தமிழக அரசியல் தலைவர்கள், பக்கத்து மாநில தலைவர்கள், தேசிய தலைவர்கள் உள்பட பலர் 'மெர்சல்' படத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துவிட்ட நிலையில் தற்போது திமுக தலைவர் கருணாநிதியின் மகளும் ராஜ்யசபை எம்பியுமான கனிமொழியும் தனது ஆதரவுக்குரலை தெரிவித்துள்ளார்
அரசியல் சாசனம் வழங்கியுள்ள கருத்து சுதந்திரத்தில் தலையிட்டால், மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும், கருத்து சுதந்திரத்திலும் கலையிலும் யாரும் தலையிட கூடாது என்றும் சற்றுமுன்னர் செய்தியாளர்களிடம் கனிமொழி எம்பி கூறினார். ஏற்கனவே மு.க.ஸ்டாலின் உள்பட பல திமுக பிரமுகர்கள் மெர்சலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com