பெண் ஓட்டுநர் ஷர்மிளா வாழ்வில் திருப்புமுனை: உறுதி அளித்த கனிமொழி எம்பி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
கோவையைச் சேர்ந்த பெண் பேருந்து ஓட்டுனர் ஷர்மிளாவின் பேருந்தில் இன்று காலை திமுக எம்பி கனிமொழி பயணம் செய்த நிலையில் அடுத்த சில மணி நேரத்தில் ஷர்மிளா பணி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் ஷர்மிளாவிடம் தொலைபேசி மூலம் பேசிய கனிமொழி எம்பி வேறு வேலைக்கு உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவையை சேர்ந்த பெண் ஓட்டுனர் ஷர்மிளாவின் பேருந்தில் இன்று காலை கனிமொழி எம்பி பயணம் செய்தார். அதே பேருந்தில் பயணம் செய்த பெண் நடத்துனருக்கும் ஷர்மிளாக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் இது பேருந்து உரிமையாளர் வரை சென்றதை அடுத்து ஷர்மிளாவை அவர் பணி நீக்கம் செய்து விட்டதாகவும் கூறப்பட்டது.
ஆனால் பேருந்து ஓட்டுனர் துரைக்கண்ணு செய்தியாளர்களிடம் பேசிய போது ஷர்மிளாவுக்கும் நடத்துனருக்கும் தான் பிரச்சனை என்றும் அதனால் ஷர்மிளா தானாகவே ராஜினாமா செய்து விட்டார் என்றும் நான் அவரை பணி நீக்கம் செய்யவில்லை என்றும் தெரிவித்தார்.
இது குறித்து ஷர்மிளா வருத்தத்துடன் பேட்டி அளித்திருந்த நிலையில் தற்போது கனிமொழி அவர்கள் ஷர்மிளாவிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு அவருக்கு வேறு வேலை வாங்கி தருவதாக உறுதியளித்துள்ளார். கனிமொழி வாங்கி கொடுக்கும் புதிய வேலையால் ஷர்மிளாவின் வாழ்வில் திருப்புமுனை ஏற்படும் என்று கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout