பெண் ஓட்டுநர் ஷர்மிளா வாழ்வில் திருப்புமுனை: உறுதி அளித்த கனிமொழி எம்பி..!

  • IndiaGlitz, [Friday,June 23 2023]

கோவையைச் சேர்ந்த பெண் பேருந்து ஓட்டுனர் ஷர்மிளாவின் பேருந்தில் இன்று காலை திமுக எம்பி கனிமொழி பயணம் செய்த நிலையில் அடுத்த சில மணி நேரத்தில் ஷர்மிளா பணி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் ஷர்மிளாவிடம் தொலைபேசி மூலம் பேசிய கனிமொழி எம்பி வேறு வேலைக்கு உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவையை சேர்ந்த பெண் ஓட்டுனர் ஷர்மிளாவின் பேருந்தில் இன்று காலை கனிமொழி எம்பி பயணம் செய்தார். அதே பேருந்தில் பயணம் செய்த பெண் நடத்துனருக்கும் ஷர்மிளாக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் இது பேருந்து உரிமையாளர் வரை சென்றதை அடுத்து ஷர்மிளாவை அவர் பணி நீக்கம் செய்து விட்டதாகவும் கூறப்பட்டது.

ஆனால் பேருந்து ஓட்டுனர் துரைக்கண்ணு செய்தியாளர்களிடம் பேசிய போது ஷர்மிளாவுக்கும் நடத்துனருக்கும் தான் பிரச்சனை என்றும் அதனால் ஷர்மிளா தானாகவே ராஜினாமா செய்து விட்டார் என்றும் நான் அவரை பணி நீக்கம் செய்யவில்லை என்றும் தெரிவித்தார்.

இது குறித்து ஷர்மிளா வருத்தத்துடன் பேட்டி அளித்திருந்த நிலையில் தற்போது கனிமொழி அவர்கள் ஷர்மிளாவிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு அவருக்கு வேறு வேலை வாங்கி தருவதாக உறுதியளித்துள்ளார். கனிமொழி வாங்கி கொடுக்கும் புதிய வேலையால் ஷர்மிளாவின் வாழ்வில் திருப்புமுனை ஏற்படும் என்று கூறப்படுகிறது.

More News

தனுஷின் இந்த படம் மூன்று பாகங்களாக உருவாகிறதா?ஆச்சரிய தகவல்..!

தமிழ் சினிமாவில் தற்போது சர்வ சாதாரணமாக இரண்டு பாகங்கள் கொண்ட திரைப்படங்கள் உருவாகிக் கொண்டிருக்கும் போது தனுஷ் நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் இரண்டு அல்லது மூன்று

விஜய் பிறந்த நாளுக்காக பிக்பாஸ் நடிகை வரைந்த ஓவியம்.. நெட்டிசன்கள் ரியாக்சன் என்ன?

 தளபதி விஜய் நேற்று தனது 49 வது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பதை பார்த்தோம்.

பிப்ரவரியில் எலும்பு முறிவு.. ஜூனில் வேற லெவலில் வொர்க்-அவுட்.. அஜித் நாயகியின் தன்னம்பிக்கை..!

கடந்த பிப்ரவரி மாதம் காலில் எலும்பு முறிவுடன் சிகிச்சை பெற்று வந்த அஜித் பட நடிகை ஒருவர் நான்கே மாதங்களில் மீண்டும் இயல்பு நிலைக்கு வந்ததோடு தற்போது காலுக்கு கடுமையான வொர்க்-அவுட் செய்யும் வீடியோவை

மேனேஜர் மோசடியில் உண்மையில் நடந்தது என்ன? ராஷ்மிகா மந்தனாவின் அறிக்கை..!

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் மேனேஜர் ரூபாய் 80 லட்சம் மோசடி செய்து விட்டதாகவும் இதையடுத்து அவரை நீக்கிவிட்டதாகவும் கூறப்பட்ட நிலையில் இது குறித்து ராஷ்மிகா மந்தனா முற்றுப்புள்ளி

பெண் டிரைவரை நேரில் பாராட்டிய கனிமொழி எம்பி.. சிறிது நேரத்தில் டிரைவர் டிஸ்மிஸ்..!

 கோவையைச் சேர்ந்த பெண் டிரைவரை கனிமொழி எம்பி நேரில் பாராட்டிய நிலையில் சிறிது நேரத்தில் அந்த பெண் டிரைவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.