தாலி ஏன் கட்டல ரசிகர் கேள்வி....! தக்க பதில் கூறிய 'குக் வித் கோமாளி' பிரபலம்....!
Send us your feedback to audioarticles@vaarta.com
அண்மையில் இன்ஸ்டாகிராமில் லைவ் வந்த குக் வித் கோமாளி கனி, ரசிகர்களிடம் உரையாடுவது மட்டுமில்லாமல், அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் கூறினார்.
'தியேட்டர் டி' யுடியூப் சேனல் ஒன்றை நடத்தி வரும் கனி "பொன்னியின் செல்வன்" தொடர் குறித்து ஒவ்வொரு எபிசோட்-ஆக அதில் தொடர்ந்து கூறி வந்தார். பின்பு "குக் வித் கோமாளி" நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார். 2-ஆவது சீசனில் வெற்றியாளர் இவர்தான். இவர் சமைத்த காரக்குழப்பு மிகவும் பிரபலமானதால் "காரக்குழம்பு கனி" என இணையவாசிகள் இவரை செல்லமாக அழைப்பார்கள். ஒரு விஷயம் பற்றி தனக்கு கேள்விகள் அதிகம் வருவதாகவும், அது குறித்து தக்க விளக்கமும் கூறியுள்ளார் கனி.
தாலி ஏன் அணிவதில்லை...? என நிறைய பேர் கேட்கிறார்கள். தாலி அணிவது நம்முடைய கலாச்சாரத்தில் இல்லாத விஷயம், இடையில் புகுத்தப்பட்டது. தமிழின் மரபுப்படி பார்த்தால், மனதுக்கு பிடித்தவரை மாலை அணிவித்து, இவர் தான் என்னுடைய துணை எனச்சொல்லி வாழ துவங்குவது தான் வாழ்க்கை என நான் நம்புகிறேன்.
தாலி கட்டித்தான் திருமணம் செய்து கொண்டேன். அது அடையாளமாகவும், எனக்கு பிடித்த விஷயமாகவும் இருந்தது. மஞ்சள் நிறத் தாலி என்றால் எனக்கு இஷ்டம். ஆனால் திருமணமான சில நாட்கள் கழித்து, புருஷன் கட்டின தாலியை, உறவுக்காரர்கள் மாற்றிக் கட்டுவார்கள். அது வேறு யாரோ போட்ட முடிச்சு என்பதால், அதில் எனக்கு ஈடுபாடில்லை. என் கணவர் கட்டிய மஞ்சள் தாலியை பத்திரமாக வைத்துள்ளேன், உயிர்போல பாதுகாத்து வருகிறேன். ஒரு நபரின் குணத்தை முடிவு செய்வது தாலி கிடையாது. எங்களுடைய 8 வருட காதல், 12 வருட திருமண வாழ்க்கை என நானும், என் கணவரும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இதை தவிர திருமணம் ஆகிவிட்டது என்று சொல்ல வேறு என்ன அடையாளம் தேவைப்படும். வீடியோவிற்காக தாலி கட்டிவிட்டு, பின்பு அதை நான் கழட்டிவிடலாம், அதை செய்ய எனக்கு விருப்பமில்லை, பிறரை ஏமாற்றவும் விருப்பமில்லை, இதுவே என் நிலைப்பாடு" என்று கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aarna Janani
Contact at support@indiaglitz.com
Comments