தாலி ஏன் கட்டல ரசிகர் கேள்வி....! தக்க பதில் கூறிய 'குக் வித் கோமாளி' பிரபலம்....!

அண்மையில் இன்ஸ்டாகிராமில் லைவ் வந்த குக் வித் கோமாளி கனி, ரசிகர்களிடம் உரையாடுவது மட்டுமில்லாமல், அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் கூறினார்.

'தியேட்டர் டி' யுடியூப் சேனல் ஒன்றை நடத்தி வரும் கனி பொன்னியின் செல்வன் தொடர் குறித்து ஒவ்வொரு எபிசோட்-ஆக அதில் தொடர்ந்து கூறி வந்தார். பின்பு குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார். 2-ஆவது சீசனில் வெற்றியாளர் இவர்தான். இவர் சமைத்த காரக்குழப்பு மிகவும் பிரபலமானதால் காரக்குழம்பு கனி என இணையவாசிகள் இவரை செல்லமாக அழைப்பார்கள். ஒரு விஷயம் பற்றி தனக்கு கேள்விகள் அதிகம் வருவதாகவும், அது குறித்து தக்க விளக்கமும் கூறியுள்ளார் கனி.

தாலி ஏன் அணிவதில்லை...? என நிறைய பேர் கேட்கிறார்கள். தாலி அணிவது நம்முடைய கலாச்சாரத்தில் இல்லாத விஷயம், இடையில் புகுத்தப்பட்டது. தமிழின் மரபுப்படி பார்த்தால், மனதுக்கு பிடித்தவரை மாலை அணிவித்து, இவர் தான் என்னுடைய துணை எனச்சொல்லி வாழ துவங்குவது தான் வாழ்க்கை என நான் நம்புகிறேன்.

தாலி கட்டித்தான் திருமணம் செய்து கொண்டேன். அது அடையாளமாகவும், எனக்கு பிடித்த விஷயமாகவும் இருந்தது. மஞ்சள் நிறத் தாலி என்றால் எனக்கு இஷ்டம். ஆனால் திருமணமான சில நாட்கள் கழித்து, புருஷன் கட்டின தாலியை, உறவுக்காரர்கள் மாற்றிக் கட்டுவார்கள். அது வேறு யாரோ போட்ட முடிச்சு என்பதால், அதில் எனக்கு ஈடுபாடில்லை. என் கணவர் கட்டிய மஞ்சள் தாலியை பத்திரமாக வைத்துள்ளேன், உயிர்போல பாதுகாத்து வருகிறேன். ஒரு நபரின் குணத்தை முடிவு செய்வது தாலி கிடையாது. எங்களுடைய 8 வருட காதல், 12 வருட திருமண வாழ்க்கை என நானும், என் கணவரும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இதை தவிர திருமணம் ஆகிவிட்டது என்று சொல்ல வேறு என்ன அடையாளம் தேவைப்படும். வீடியோவிற்காக தாலி கட்டிவிட்டு, பின்பு அதை நான் கழட்டிவிடலாம், அதை செய்ய எனக்கு விருப்பமில்லை, பிறரை ஏமாற்றவும் விருப்பமில்லை, இதுவே என் நிலைப்பாடு என்று கூறியுள்ளார்.

 

More News

தந்தை பெயரை மகனுக்கு வைத்த சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்த நிலையில் அந்த குழந்தைக்கு தனது தந்தையின் பெயரையே வைத்துள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். 

ராஜராஜ சோழன் குறித்து பா ரஞ்சித் பேசிய வழக்கு: மதுரை ஐகோர்ட் முக்கிய உத்தரவு!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பா ரஞ்சித் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில் அந்த வழக்கில் இன்று அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது 

'காதல்' இயக்குனர் பாலாஜி சக்திவேலுக்கு விஜய்சேதுபதி செய்த உதவி!

பரத், சந்தியா நடித்த 'காதல்' தமன்னா நடித்த 'கல்லூரி' மற்றும் 'வழக்கு எண் 18/9' உள்பட ஒரு சில திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் பாலாஜி சக்திவேல்

தமிழ் உள்பட 3 மொழிகளில் தயாராகும் சூப்பர்ஹிட் மலையாள திரைப்படம்: தமிழில் இயக்குனர் இவரா?

மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கிய 'த்ரிஷ்யம்' திரைப்படம் தமிழ் உள்பட கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு விட்டது என்பது தெரிந்ததே

மீண்டும் தயாராகும் வாழ்க்கை வரலாறு திரைப்படம்: ஷகிலா கேரக்டரில் ரஜினி நாயகியா?

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ஷகிலா என்பதும் அவற்றில் பெரும்பாலானவை கவர்ச்சி படங்கள் என்பதும்