வெளிநாடு செல்லும் 'கங்குவா' குழு.. பாலிவுட் வில்லனுடன் மோதும் காட்சி படப்பிடிப்பு..!

  • IndiaGlitz, [Monday,July 24 2023]

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் ஞானவேல் ராஜா தயாரிப்பில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ‘கங்குவா’. இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி இணையத்தில் வைரலான நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக கொடைக்கானலில் நடைபெற்றது என்றும் இந்த படப்பிடிப்பில் பிளாஷ்பேக் சரித்திர கால காட்சியின் காட்சிகள் படமாக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது. மேலும் பிளாஷ்பேக் காட்சிகள் நட்டி நடராஜன் வில்லனாக நடித்துள்ளதாகவும் அவருடன் சூர்யா மோதும் காட்சிகளின் படப்பிடிப்பு நடந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் அடுத்த கட்டமாக ‘கங்குவா’ படக்குழு பாங்காக் செல்வதாகவும், இதில் படக்குழுவினர்களுடன் பிரபல பாலிவுட் நடிகர் பாபி தியோல் இணைகிறார் என்றும் சூர்யா மற்றும் பாபி தியோல் போதும் ஆக்ரோஷமான ஸ்டண்ட் காட்சிகள் பாங்காக்கில் படமாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.



சூர்யா ஜோடியாக திஷா பதானி நடிக்கும் இந்த படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்தராஜ், ஜெகபதி பாபு, நடராஜன் சுப்பிரமணியம், பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ரூ.350 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மறுபடியும் மார்க்கெட்டை பிடிக்காமல் விட மாட்டாங்க போல.. அமலாபாலின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

நடிகை அமலாபால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்தார் என்பதும், அஜித் விஜய் உட்பட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார் என்பதும் தெரிந்ததே.

குழந்தையை கொஞ்சும் க்யூட் நயன்தாரா.. விக்னேஷ் சிவன் பகிர்ந்த புகைப்படம்..!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது குழந்தையை கொஞ்சம் க்யூட் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது. 

சூர்யா ரசிகர்களுக்கு அடுத்த விருந்து.. 'கங்குவா' அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக்..!

நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று அதிகாலை 12.01 மணிக்கு அவர் நடித்து வரும் 'கங்குவா' என்ற படத்தையும் கிளிம்ஸ் வீடியோ வெளியானது என்பதும் இந்த வீடியோ மிகப்பெரிய அளவில்

ரூ.300 கோடிக்கும் அதிகமான பிசினஸ்.. டிஜிட்டல் ரைட்ஸ்-இல் மட்டும் பணத்தை அள்ளும் கமல் படங்கள்..!

கமல்ஹாசனின் அடுத்த இரண்டு படங்களின் டிஜிட்டல் ரைட்ஸ் மட்டுமே 300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக பிசினஸ் செய்துள்ளதாக கூறப்படுவது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஹீரோவாக யோகி பாபுவின் அடுத்த படம்.. வீடியோவை வெளியிட்ட மடோன் அஸ்வின்..!

யோகி பாபு தனது பிறந்த நாளை நேற்று கொண்டாடிய நிலையில் அவர் ஹீரோவாக நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தின்  வீடியோவை 'மண்டேலா' மற்றும் 'மாவீரன்' இயக்குனர் மடோன் அஸ்வின் தனது சமூக