4 கண்கள் பேசும்போது வார்த்தைக்கு என்ன வேலை.. சூர்யாவின் 'கங்குவா' சிங்கிள் பாடல்..!

  • IndiaGlitz, [Monday,October 21 2024]

சூர்யா நடித்த ‘கங்குவா’ திரைப்படம் வரும் நவம்பர் 14 ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இந்த பாடலின் சிங்கிள் பாடல் சற்றுமுன் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

’யோலோ’ என்ற இந்த பாடலுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து பாடியுள்ளார். அவருடன் லாவிட்டோ லொபோ என்பவரும் பாடியுள்ளார். இந்த பாடலை பாடலாசிரியர் விவேகா எழுதியுள்ளார்.

இந்த பாடலின் வீடியோவில் சூர்யா மற்றும் திஷா பதானி அட்டகாசமாக டான்ஸ் ஆடும் காட்சிகள் இருப்பதனால், நான்கு நிமிடங்களுக்கு மேல் உள்ள இந்த பாடல் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பாடலை பார்க்கும்போதே படத்தையுடம் உடனே பார்க்க வேண்டும் என்று ஆவல் ஏற்படுவதாக ரசிகர்கள் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த பாடலின் சில வரிகள் இதோ:

நான்கு கண்கள் பேசும்போது
வார்த்தைக்கு இங்கே என்ன வேலை
மூச்சுக்காற்று மோதும்போது
பேச்சுக்கு இங்கே என்ன தேவை

ஏய் பரபர பரபர பரபரக்குது இமை
வரவர வரவர வரவர நீ வர வர எந்தன் கண்ணோரம்
சிறசிற சிற சிற சிறகடிக்கிற நிலை
விரவிர விரவிர விரல் நுனிகளில் தந்ததே மின்சாரம்..

YOLO – You Only Live Once
YOLO – You Got To Do Tonnes

More News

'கட்டம் கட்டி கலக்குறோம்': சிம்பு அடுத்த படத்தின் அட்டகாசமான போஸ்டர்..!

நடிகர் சிம்பு நடிக்க இருக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு இன்று மாலை வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சற்றுமுன் அந்த படத்தின் அறிவிப்பு அட்டகாசமான போஸ்டர்

துலாம் முதல் மீனம் வரை ராசிகளுக்கான மாத பலன்கள் - ஆதித்ய குருஜி

அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான ஆன்மீக ஜோதிட பலன்கள்

எல்லாத்துக்கும் விஜய் சேதுபதி தான் காரணமா? அர்னவ் இன்ஸ்டா போஸ்ட்டால் பரபரப்பு..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று அர்னவ் வெளியேறிய நிலையில், அவர் வெளியேறும் போது அவரை நக்கலாக விஜய் சேதுபதி பேசியதும், அர்னவ்  பேசிய சில விஷயங்களை அவர் கண்டித்ததையும்

நடிகை கவுதமிக்கு முக்கிய பொறுப்பு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி: திரையுலகினர் வாழ்த்து..!

நடிகை கவுதமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிமுகவில் இணைந்த நிலையில், அவருக்கு முக்கிய பதவியை அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

என்ன செஞ்சாலும் தப்பு சொல்றாங்க.. செளந்தர்யாவை கதறி அழவைத்த பெண்கள் அணி..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக இருக்கும் சௌந்தர்யா, "நான் என்ன செய்தாலும் தப்பு தான் சொல்றாங்க"