4 கண்கள் பேசும்போது வார்த்தைக்கு என்ன வேலை.. சூர்யாவின் 'கங்குவா' சிங்கிள் பாடல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா நடித்த ‘கங்குவா’ திரைப்படம் வரும் நவம்பர் 14 ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இந்த பாடலின் சிங்கிள் பாடல் சற்றுமுன் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
’யோலோ’ என்ற இந்த பாடலுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து பாடியுள்ளார். அவருடன் லாவிட்டோ லொபோ என்பவரும் பாடியுள்ளார். இந்த பாடலை பாடலாசிரியர் விவேகா எழுதியுள்ளார்.
இந்த பாடலின் வீடியோவில் சூர்யா மற்றும் திஷா பதானி அட்டகாசமாக டான்ஸ் ஆடும் காட்சிகள் இருப்பதனால், நான்கு நிமிடங்களுக்கு மேல் உள்ள இந்த பாடல் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பாடலை பார்க்கும்போதே படத்தையுடம் உடனே பார்க்க வேண்டும் என்று ஆவல் ஏற்படுவதாக ரசிகர்கள் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த பாடலின் சில வரிகள் இதோ:
நான்கு கண்கள் பேசும்போது
வார்த்தைக்கு இங்கே என்ன வேலை
மூச்சுக்காற்று மோதும்போது
பேச்சுக்கு இங்கே என்ன தேவை
ஏய் பரபர பரபர பரபரக்குது இமை
வரவர வரவர வரவர நீ வர வர எந்தன் கண்ணோரம்
சிறசிற சிற சிற சிறகடிக்கிற நிலை
விரவிர விரவிர விரல் நுனிகளில் தந்ததே மின்சாரம்..
YOLO – You Only Live Once
YOLO – You Got To Do Tonnes
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments