இதுவரை விற்பனையாகாத தொகை.. 'கங்குவா' பிசினஸில் ஆச்சரியம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா நடித்த ‘கங்குவா’ திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படத்தின் பிசினஸ் குறித்த தகவல்கள் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே ‘கங்குவா’ படத்தின் தமிழக ரிலீஸ் உரிமை உள்பட சில உரிமைகள் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது வெளிநாட்டு உரிமை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
‘கங்குவா’ திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமைகளை பார்ஸ் பிலிம்ஸ் என்ற நிறுவனம் 40 கோடி ரூபாய்க்கு வாங்கியதாக கூறப்படுகிறது. தமிழ் திரை உலகில் இதுவரை எந்த ஒரு படத்திற்கும் இவ்வளவு பெரிய தொகை வெளிநாட்டு உரிமை பிசினஸ் நடந்தது இல்லை என்ற நிலையில் ‘கங்குவா’ திரைப்படம் சாதனை செய்துள்ளது என்றே கூறப்படுகிறது.
ஏற்கனவே தமிழ்நாட்டு ரிலீஸ் உரிமை 60 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளதாகவும் இதுவரை 350 கோடிக்கு இந்த படம் பிசினஸ் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’வேட்டையன்’ திரைப்படமும் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையிலும் ‘கங்குவா’ படத்தின் பிசினஸ் அபாரமாக இருப்பது கோலிவுட் திரையுலகினர்களை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com