'கங்குவா' படத்தின் ஒன்லைன் கதையை லீக் செய்த முன்னணி நிறுவனம்.. அதிருப்தியில் ரசிகர்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ’கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீசுக்கு பின்னர் ஓடிடியில் வெளியிடும் உரிமையை பெற்றுள்ள அமேசான் பிரைம் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் இந்த படத்தின் ஒன்லைன் கதையை வெளியிட்டதை அடுத்து ரசிகர்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.
அமேசான் தனது சமூக வலைதளத்தில் 1700 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையிலான டைம் டிராவல் கதை அம்சம் கொண்டது என்றும் 500 வருடங்களுக்கு முன் செய்ய முடியாததை 2023 ஆம் ஆண்டு ஹீரோ செய்து முடிக்கிறார் என்றும் ஒன்லைன் கதையை வெளியிட்டுள்ளனர்.
இந்த ஒன்லைன் கதையை பார்த்து ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். ஏன் கதையை வெளியிட்டீர்கள் என்றும் அவர்கள் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான ’பிம்பிசாரா’ என்ற தெலுங்கு படத்திலும் கிட்டத்தட்ட இதே கதை தான் என்றும் 500 ஆண்டு காலத்திற்கு முன் செய்ய முடியாததை ஹீரோ செய்வதுதான் அந்த படத்தின் கதை என்றும் ரசிகர்கள் பதிவு செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மொத்தத்தில் ’கங்குவா’ படத்தின் ஒன்லைன் கதை லீக் ஆனாலும் அதன் மேக்கிங் சூப்பராக இருக்கும் என்றும் சிறுத்தை சிவாவின் வித்தியாசமான படமாக இது இருக்கும் என்றும் சூர்யா ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
A story that travels 500 years from 1700’s to 2023 about a Hero who has to fulfil a mission left unfinished. #Kanguva available post-theatrical release. #AreYouReady #PrimeVideoPresents pic.twitter.com/q6StN8XD3e
— prime video IN (@PrimeVideoIN) March 19, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments