close
Choose your channels

'கங்குவா' படப்பிடிப்பு முடிய இன்னும் இத்தனை மாதங்கள் ஆகுமா? அப்ப ரிலீஸ் எப்போது?

Wednesday, June 21, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ’கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டு இறுதியில் அதாவது நவம்பர் மாதம் தான் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு முடிவடையும் என்று கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக ’கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் நேற்று முதல் இவிபி ஃபிலிம் சிட்டியில் மீண்டும் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கியது. இந்த படப்பிடிப்பில் அதிரடி ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாகவும் ஒரு வாரம் இந்த படப்பிடிப்பு நடைபெறும் என்று கூறப்படுகிறது. இதற்கு மிகப்பெரிய அளவில் பெரும் பொருட்செலவில் பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து படக்குழுவினர் அடுத்த கட்டமாக மீண்டும் கொடைக்கானல் செல்கின்றனர் என்றும் அங்கு சுமார் 20 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு நவம்பர் மாதம் தான் முடிவடையும் என்றும் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் சூர்யாவின் பிறந்த நாளான ஜூலை 23ஆம் தேதி இந்த படத்தின் ப்ரோமோ அல்லது கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் 10க்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் நடித்து வரும் சூர்யா ஜோடியாக திஷா பதானி நடித்து வருகிறார். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவில் நிஷாத் யூசுப் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment