'கங்குவா' படத்தின் தென்னிந்திய டிஜிட்டல் உரிமை பிசினஸ் மட்டும் இத்தனை கோடியா? ஆச்சரிய தகவல்..!
- IndiaGlitz, [Thursday,March 21 2024]
சூர்யா நடிப்பில் உருவான ’கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது கிராபிக்ஸ் உள்பட தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியான நிலையில் அந்த டீசர் மில்லியன் கணக்கான பார்வையாளர்களை பெற்று சாதனை செய்துள்ளது என்பதும் டீசர் ரிலீஸ்-க்கு பின்னர் இந்த படத்தின் எதிர்பார்ப்பு உச்சத்தை சென்று உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் பிசினஸ் ஆரம்பம் ஆகிவிட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனம் வாங்கியிருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த பிசினஸ் எவ்வளவு தொகை என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
’கங்குவா’ படத்தின் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு தென்னிந்திய மொழிகளின் டிஜிட்டல் உரிமையை மட்டும் அமேசான் நிறுவனம் 80 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருப்பதாகவும் ஹிந்தி டிஜிட்டல் உரிமை பிசினஸ் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த படத்தின் பட்ஜெட் 300 கோடி ரூபாய் என்று கூறப்படும் நிலையில் அதில் கிட்டத்தட்ட 25% தென்னிந்திய டிஜிட்டல் ரிலீஸ் உரிமையில் இருந்தே கிடைத்து விட்டது என்பதும் இன்னும் பிரமிக்க வைக்கும் அளவுக்கு இந்த படத்தின் பிசினஸ் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
10 வித்தியாசமான கெட்டப்களில் சூர்யா நடித்துள்ள இந்த படம் மொத்தம் 48 மொழிகளில் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகப்போகிறது என்பதும் இந்த படம் சூர்யாவின் திரையுலக வாழ்க்கையில் ஒரு உச்சத்தை காணும் படமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.