'கங்குவா' படத்தின் 500 வருட கதை இதுதானா? வேற லெவலில் ஒரு தகவல்..!
- IndiaGlitz, [Monday,June 03 2024]
சூர்யா நடிப்பில் , சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகிய ’கங்குவா’படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் கதை குறித்த தகவல் கசிந்துள்ளது.
இந்த படத்தில் கதை 500 வருடங்கள் கொண்டது என்றும் 1700 களில் ஆரம்பித்து 2023 முடியும் கதையம்சம் கொண்டது என்றும் ஏற்கனவே செய்தி வெளியானது என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி ’கங்குவா’ திரைப்படத்தின் கதை 1678 ஆம் ஆண்டு தொடங்குகிறது என்றும் அப்போது நடக்கும் ஒரு போரில், போர் வீரன் ஒரு மர்ம நோயால் உயிரிழந்து விட அந்த சமயத்தில் ஒரு பெண் அந்த நோய் குறித்து ஆய்வு செய்வதாகவும் அந்த ஆய்வு முடிவு 2023 ஆம் ஆண்டுதான் தெரிய வருவதாகவும் அதன் பின்னர் என்ன நடந்தது என்பதுதான் இந்த படத்தின் கதை என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே சூர்யா 10 விதமான கெட்டப்புகளில் இந்த படத்தில் நடித்து வருகிறார் என்று கூறப்படும் நிலையில் இந்த படத்தின் கதையை பார்க்கும் போது எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், நட்டி, ஜெகபதி பாபு, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த்ராஜ், ஜி மாரிமுத்து, தீபா வெங்கட் மற்றும் கேஎஸ் ரவிகுமார் உள்பட பலர் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையில், வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவில், நிஷாத் யூசுப் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் சுமார் 350 கோடி செலவில் உருவாகியுள்ளது.