இதுவரை இல்லாத வகையில் 5 வித்தியாசமான ஸ்டண்ட் காட்சிகள்.. 'கங்குவா' குறித்து பிரபலம் தகவல்..!

  • IndiaGlitz, [Tuesday,November 14 2023]

தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத அளவில் ஐந்து வித்தியாசமான ஸ்டண்ட் காட்சிகள் ‘கங்குவா’ படத்தில் இடம் பெற்றுள்ளதாக பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளார்.

‘கங்குவா’ படத்தின் மேக்கப் கலைஞர் ரஜினி அம்பாடி என்பவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘‘கங்குவா’ படத்தில் இடம் பெற்ற ஸ்டண்ட் காட்சிகள் குறித்து தெரிவித்துள்ளார்.

இந்த படத்தில் அண்டர் வாட்டர் ஸ்டண்ட் காட்சி, மரக்கிளைகளில் நின்று கொண்டு ஸ்டண்ட் காட்சி, பிளைட் ஸ்டண்ட் காட்சி, பீச் ஸ்டண்ட் காட்சி மற்றும் படகுகளில் ஸ்டண்ட் என ஐந்து விதமான வித்தியாசமான ஸ்டண்ட் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரை இல்லாத வகையில் இந்த படத்தில் அனைத்து ஸ்டண்ட் காட்சிகளும் வித்தியாசமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் அனைத்து ஸ்டண்ட் காட்சிகளுமே பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் படமாக்கப்பட்டது என்றும் ரசிகர்கள் திரையில் இந்த ஸ்டண்ட் காட்சிகளை பார்க்கும்போது ஆச்சரியம் அடைவார்கள் என்று கூறியுள்ளார்.

மொத்தத்தில் ‘கங்குவா’ படத்தின் வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்களை பார்க்கும்போது இந்த படம் இதுவரை இல்லாத வகையில் தமிழ் சினிமாவின் வித்தியாசமான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'சிங்கப்பூர் சலூன்' படத்தில் லோகேஷ் கேரக்டர் இதுதான்.. ரகசியத்தை உடைத்த இயக்குனர்..!

ஆர் ஜே பாலாஜி நடிப்பில் கோகுல் இயக்கத்தில் உருவாகி வரும் 'சிங்கப்பூர் சலூன்' என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

திடீரென பெட்ரூம் கதவை மூடிய பிக்பாஸ்.. திணறும் போட்டியாளர்கள்.. என்ன காரணம்?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று திடீரென பெட்ரூம் கதவை பிக் பாஸ் முடி விட்டதாக ப்ரோமோ வீடியோவில் காண்பிக்கப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுதான் கமலுக்கும் கோபிநாத்துக்கும் உள்ள வித்தியாசம்... வீடியோவை வைரலாக்கும் நெட்டிசன்கள்..!

இதுதான் கமல்ஹாசனுக்கும் கோபிநாத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் என கோபிநாத்தின் 'நீயா நானா' நிகழ்ச்சியில் நடந்த ஒரு சம்பவம் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்த சம்பவத்தை ஒப்பிட்டு

நமக்கு இதுதான் தலைதீபாவளி...ரவீனாவிடம் மணி சந்திரா கூறிய காரணம்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான மணி சந்திரா, ரவீனாவிடம் தனக்கு தல தீபாவளி என்று கூறியதை கேட்டு ரவீனா ஆச்சரியம் அடைகிறார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

செருப்பால அடிப்பாங்க... சாமி தரிசனம் செய்த பின்னர் பேட்டியளித்த ரோஜா..!

ஒரு பெண் மீது தவறான குற்றச்சாட்டு கூறினால் பெண்களை செருப்பால் அடிப்பார்கள் என்று நடிகையும் அமைச்சருமான ரோஜா இன்று அளித்த பேட்டியில் கூறியுள்ளார்