இப்படி கூட சேலை கட்டலாமா திஷா பதானி? ஒரு சில மணி நேரத்தில் 9 லட்சம் லைக்ஸ்..!

  • IndiaGlitz, [Tuesday,June 20 2023]

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ’கங்குவா’ உள்பட ஒரு சில படங்களில் நடித்து வரும் நடிகை திஷா பதானியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் இப்படி கூட சேலை கட்டலாமா? என இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் திஷா பதானி என்பதும் சூர்யாவின் 'கங்குவா’, பிரபாஸின் ‘புரொஜக்ட் கே’ உள்பட பல படங்களில் நடித்து வருகிறார். எம் எஸ் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் அறிமுகம் ஆகி தற்போது முன்னணி நடிகையாக இருக்கும் திஷா பதானியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் 58 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் திஷா பதானி சற்றுமுன் அட்டகாசமான சேலை காஸ்டியூமில் எடுக்கப்பட்ட போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். படு கவர்ச்சியாக இருக்கும் இந்த புகைப்படங்களை பார்த்து ’இப்படி கூட சேலை கட்டலாமா திஷா பதானி? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த புகைப்படங்கள் பதிவு செய்து ஒரு சில மணி நேரங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் சுமார் 9 லட்சம் லைக்ஸ் மற்றும் 5000 கமெண்ட் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.