close
Choose your channels

3D டெக்னாலஜியில் வெளியாகிறது 'கங்குவா'.. உறுதி செய்த படக்குழுவின் பிரபலம்..!

Tuesday, October 1, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடித்த ‘கங்குவா’ திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி வெளியிடப்படும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் வெளியான ‘கங்குவா’ டிரைலர் மில்லியன் கணக்கான பார்வையாளர்களை பெற்ற நிலையில், அடுத்த கட்டமாக சிங்கிள் பாடல், புதிய ட்ரெய்லர், மற்றும் இசை வெளியீட்டு விழா என ப்ரோமோஷன் வேலைகள் திட்டமிடப்பட்டுள்ளன.

ரூ.300 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகிய ‘கங்குவா’ திரைப்படம், தமிழ் உள்பட 10 மொழிகளில் திரையரங்கிலும், 30க்கும் மேற்பட்ட மொழிகளில் ஓடிடி தளங்களிலும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ‘கங்குவா’ திரைப்படம் 3D டெக்னாலஜியில் உருவாக இருப்பதை, இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் வெற்றி பழனிசாமி உறுதி செய்துள்ளார். இது குறித்து சமூக வலைதளத்தில், ‘கங்குவா’ படத்தில் 3D பணியில் உள்ளேன். த்ரில் மற்றும் புதிய அனுபவத்துடன் இந்த பணியில் ஈடுபட்டு இருக்கிறேன்" என்று அவர் பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து, 3D டெக்னாலஜியில் ‘கங்குவா’ திரைப்படம் வெளியிடப்பட இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், நட்டி, ஜெகபதி பாபு, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த்ராஜ், ஜி மாரிமுத்து, தீபா வெங்கட் மற்றும் கேஎஸ் ரவிகுமார் உள்பட பலர் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையில், வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவில், நிஷாத் யூசுப் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் இந்திய சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment