3D டெக்னாலஜியில் வெளியாகிறது 'கங்குவா'.. உறுதி செய்த படக்குழுவின் பிரபலம்..!

  • IndiaGlitz, [Tuesday,October 01 2024]

சூர்யா நடித்த ‘கங்குவா’ திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி வெளியிடப்படும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் வெளியான ‘கங்குவா’ டிரைலர் மில்லியன் கணக்கான பார்வையாளர்களை பெற்ற நிலையில், அடுத்த கட்டமாக சிங்கிள் பாடல், புதிய ட்ரெய்லர், மற்றும் இசை வெளியீட்டு விழா என ப்ரோமோஷன் வேலைகள் திட்டமிடப்பட்டுள்ளன.

ரூ.300 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகிய ‘கங்குவா’ திரைப்படம், தமிழ் உள்பட 10 மொழிகளில் திரையரங்கிலும், 30க்கும் மேற்பட்ட மொழிகளில் ஓடிடி தளங்களிலும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ‘கங்குவா’ திரைப்படம் 3D டெக்னாலஜியில் உருவாக இருப்பதை, இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் வெற்றி பழனிசாமி உறுதி செய்துள்ளார். இது குறித்து சமூக வலைதளத்தில், ‘கங்குவா’ படத்தில் 3D பணியில் உள்ளேன். த்ரில் மற்றும் புதிய அனுபவத்துடன் இந்த பணியில் ஈடுபட்டு இருக்கிறேன் என்று அவர் பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து, 3D டெக்னாலஜியில் ‘கங்குவா’ திரைப்படம் வெளியிடப்பட இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், நட்டி, ஜெகபதி பாபு, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த்ராஜ், ஜி மாரிமுத்து, தீபா வெங்கட் மற்றும் கேஎஸ் ரவிகுமார் உள்பட பலர் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையில், வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவில், நிஷாத் யூசுப் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் இந்திய சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

திருமண அறிவிப்பா? திரைப்பட அறிவிப்பா? வனிதா விஜயகுமார் பதிவால் ரசிகர்கள் குழப்பம்..!

நடிகை வனிதா விஜயகுமார், டான்ஸ் மாஸ்டர் ராபர்டுடன் காதலுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, "அக்டோபர் 5ஆம் தேதி முக்கிய அறிவிப்புக்காக காத்திருங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

ஹிந்தியில் ஏன் பேச வேண்டும்? நான் தென்னிந்தியர்.. நடிகை மீனா பதிலடி..!

சமீபத்தில் நடந்த திரைப்பட விழாவில் நடிகை மீனா கலந்து கொண்ட நிலையில், நிருபர்கள் அவரிடம் ஹிந்தியில் பேசுமாறு கேட்டபோது, "நான் ஏன் ஹிந்தியில் பேச வேண்டும்?

மகாளய அமாவாசை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் திதி கொடுக்கும் முறை

பித்ரு தோஷ நிவர்த்திக்கு சிறந்த நாள்! மகாளய அமாவாசை: முன்னோர்களை வழிபடும் சிறப்பு நாள் | ஆன்மீகக்ளிட்ஸ்

'வேட்டையன்' படத்தின் சென்சார் தகவல்.. ட்ரிம் செய்ய தேவை இல்லாத ரன்னிங் டைம்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்' திரைப்படம் வரும் 10-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல் வேலையாய் உள்ளன.

எனது படத்தில் இருந்து டிடிஎஃப் வாசன் நீக்கப்படுகிறார்: இயக்குனர் அதிரடி அறிவிப்பு..

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன், "மஞ்சள் வீரன்" என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்த நிலையில், அந்த படத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் செல்அம் அறிவித்திருப்பது பரபரப்பை