'கங்குவா' இசை வெளியீட்டு விழா எப்போது? எங்கே? அதிகாரபூர்வ அறிவிப்பு.!

  • IndiaGlitz, [Sunday,October 20 2024]

சூர்யா நடித்த ’கங்குவா’ திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் வீடியோ ஒன்றும் வெளியாகி, அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில், ஞானவேல் ராஜா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ’கங்குவா’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், இந்த படம் இந்திய சினிமாவில் மிக முக்கியமான படம் என்றும் கூறப்படுகிறது. திரையரங்குகளில் 10 மொழிகளிலும், கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட மொழிகளில் ஓடிடியிலும் வெளியாகவுள்ள இந்த படம், சுமார் 350 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ’கங்குவா’ படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 26ஆம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் மாலை 6:00 மணிக்கு நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனத்தின் சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், நட்டி, ஜெகபதி பாபு, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த்ராஜ், ஜி மாரிமுத்து, தீபா வெங்கட் மற்றும் கேஎஸ் ரவிகுமார் உள்பட பலர் நடித்துள்ளனர். வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவில், நிஷாத் யூசுப் படத்தொகுப்பில் ‘கங்குவா’ படம் உருவாகியுள்ளது.

More News

உங்கள் குரலுக்கு எப்போதுமே சக்தி அதிகம் சார்.. அண்ணாமலைக்கு நன்றி தெரிவித்த இயக்குனர்..!

சசிகுமார் நடித்த 'நந்தன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தை பாராட்டி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நீங்க பண்ணினதுக்கான எதிர்வினை தான் இது.. ஜாக்குலினை பொளந்து கட்டிய விஜய் சேதுபதி..!

பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் இன்று 14வது நாளாக ஒளிபரப்பாக உள்ள நிலையில், விஜய் சேதுபதி மிகவும் தைரியமாக தன் மனதில் பட்டதை போட்டியாளர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி வருகிறார்.

'சட்டம் ஆளுக்கு ஏத்த மாதிரி வளையும் நெளியும்'.. 'வேட்டையன்' அன்சீன் வீடியோ..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்' திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த படத்தின் அன்சீன் காட்சிகள் படக் குழுவினரால்

 Gen Z மோடில் அடுத்த படம்.. சிம்பு அறிவிப்பால் ரசிகர்கள் குஷி..!

நடிகர் சிம்பு தனது எக்ஸ் பக்கத்தில் நடிக்க இருக்கும் அடுத்த படத்தை அறிவித்துள்ளார், இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கேட்ட கேள்விக்கான பதிலை சொல்லுங்க.. தர்ஷா குப்தாவை வறுத்தெடுத்த விஜய் சேதுபதி..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் விறுவிறுப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிலையில், இன்றைய விஜய் சேதுபதி எபிசோடு வழக்கத்தை விட சுவாரஸ்யமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.