கங்கனா ரனாவத் 'சந்திரமுகி' லுக்.. அட்டகாசமான போஸ்டர் ரிலீஸ்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ராகவா லாரன்ஸ் நடிப்பில், பி வாசு இயக்கத்தில் உருவாகி வரும் ’சந்திரமுகி 2’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த படம் விநாயகர் சதுர்த்தி திருவிழாவின் போது வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி வருகின்றன என்பதும் குறிப்பாக சமீபத்தில் வேட்டையன் கேரக்டரில் நடித்துள்ள ராகவா லாரன்ஸ் போஸ்டர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் சற்றுமுன் லைகா நிறுவனம் சந்திரமுகி கேரக்டரில் நடித்த கங்கனா ரனாவத் போஸ்டரை வெளியிட்டுள்ளது. அட்டகாசமாக இருக்கும் இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த படத்தில் சந்திரமுகி கேரக்டரில் நடித்த கங்கனாவுக்கு நீட்டா லுல்லா என்பவர் காஸ்டியூம் டிசைன் செய்து உள்ளார் என்பதும் இவர் நான்கு முறை தேசிய விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்கார் விருது பெற்ற எம்எம் கீரவாணி இசையில் உருவாகும் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.
The beauty ✨ & the pose 😌 that effortlessly steals our attention! 🤩 Presenting the enviable, commanding & gorgeous 1st look of #KanganaRanaut as Chandramukhi 👑💃 from #Chandramukhi2 🗝️
— Lyca Productions (@LycaProductions) August 5, 2023
Releasing this GANESH CHATURTHI in Tamil, Hindi, Telugu, Malayalam & Kannada! 🤗
🎬… pic.twitter.com/KZPMPd5PkB
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments