ஜெயலலிதா பயோபிக் 'தலைவி': முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கங்கனா ரனாவத்!

முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘தலைவி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது என்பதும், கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பின்னர் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் கங்கனா ரனாவத் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்பதும் தெரிந்ததே.

கடந்த சில நாட்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் இந்த படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் நடித்து வரும் கங்கனா ரணாவத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ’தலைவி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது என அறிவித்துள்ளார்.

இதுகுறித்து கங்கனா தனது சமூக வலைத்தளத்தில், ‘இன்றுடன் வெற்றிகரமாக எங்கள் கனவுத் திரைப்படமான 'தலைவி'யின் படப்பிடிப்பை நாங்கள் நிறைவு செய்துள்ளோம். எந்த ஒரு நடிகைக்கும் எளிதில் கிடைக்காத ஒரு கதாபாத்திரம் எனக்கு கிடைத்துள்ளது. ’தலைவி’ கேரக்டரை நான் மிகவும் நேசித்தேன். ஆனால் திடீரென அதற்கு விடை கொடுக்கும் நேரம் வந்துவிட்டதை அறிந்து உணர்ச்சிகள் மேலிடுகின்றன. வாழ்க்கையில் ஒரே ஒரு முறை மட்டுமே கிடைக்கும் இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த இயக்குனர் ஏஎல் விஜய் உள்பட படக்குழுவினருக்கு நன்றி’ என தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத், எம்ஜிஆர் படத்தில் அரவிந்தசாமியும் நடித்துள்ள இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் பெரும்பாலும் முடிந்து விட்டதால் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.